Header Ads



சம்பத் வங்கிக் கணக்குகளை, நீக்குமாறு ஜம்இய்யா உலமா கூறவில்லை


 கடந்த வாரம் தெஹிவல பகுதியில் உள்ள சம்பத் வங்கிக் கிளையொன்றில் இடம் பெற்ற விவகாரம் தொடர்பில் ஜம்இய்யா தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக தீர்த்துக் கொள்வது சிறந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பத் வங்கிக் கணக்குகளை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக்கொள்கிறது எனும் தலைப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றது.

முஸ்லிம்களின் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளிவரும் போது அவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் www.acju.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக உறுதி செய்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களிடம் ஜம்இய்யா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.


அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

5 comments:

  1. Take action against to the liers... not passing statement like above.

    Close their mouth by yakimg them to law......

    ReplyDelete
  2. jamiyathul ulama sonnaulm.solla illattiyum.ella muslimhalum sampath bank accountay cancell seyya wendu.

    ReplyDelete
  3. சம்பத் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெரிய முஸ்லிம் பணக்காரர்களின் தகவல்களை, இரகசியத்தகவல்களாக இறைவரித்திணைக்களம், பாதுகாப்புத் தரத்துக்கு இந்த வங்கி வழமையாக வழங்குவதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அதுபற்றிய உண்மையை அறிய ஆவல்.

    ReplyDelete
  4. சம்பத் வங்கியை ஜாமியா சொல்வதற்கு முன் பல முஸ்லிம்கள் புறக்கணித்துவிட்டார்கள்

    ReplyDelete
  5. What will happen if singalish did or boycott our business think wisely

    ReplyDelete

Powered by Blogger.