Header Ads



மனிதாபிமானத்தில் தோல்வி, அடைந்து கொண்டிருக்கும் இந்தியா

கேரளாவில் இறந்து போன யானைக்காக நாடு முழுவதும் நீலிக்கண்ணீர் வடித்து கொண்டு திரிந்த சங்கிகளின் #மனுஸ்மிருதி மாடலில் ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் குணா என்ற இடத்தில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் செய்தி...
தலித் குடும்பம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தது...

புதிதாக ஒரு கல்லூரி தூங்குவதற்காக... அந்த இடத்தை அரசு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தது....நிலத்தை கைவசம் வைத்து இருப்பவர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் வந்த போது.... தாங்கள் ஏற்கனவே விவசாயம் செய்து வந்த அந்த நிலத்தில் தற்போது அறுவடை நெருங்கி வருவதாகவும், அறுவடை முடிக்க காலம் அவகாசம் தந்தால், அறுவடை முடித்து விட்டு இடத்தை காலி செய்வதாகவும் கோரிக்கை வைத்தார்கள்...கெஞ்சி கேட்டார்கள்...!

ஆனால் அரசு நிர்வாகம் பயிர் செய்யப்பட்டிருந்த நிலத்தில் அடாவடியாக புல்டோசரை இறக்கி பயிர்களை அழிக்கத் தொடங்கியது... இதைத் தடுக்க முயன்ற அந்த குடும்பத்தினருக்கு, செய்தியாளர்கள் அரசு அதிகாரிகள் முன்னிலையில்... தங்கள் குழந்தைகள் பார்த்து கதற...போலீசாரின் தடியடியையும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது...

தங்களது ஓராண்டு கால உழைப்பு கண்முன்னே அழிக்கப்படுவதை கண்ட அந்த விவசாயியும் அவரது மனைவியும் தங்கள் குடிசையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, அதிகாரிகள் முன்னிலையிலேயே குடித்து தற்கொலை செய்ய முயன்றனர்... இதைக்கண்ட அவர்களின் குழந்தைகள் கதறி அழுதனர்...

அந்த விவசாயியும் அவரது மனைவியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா பாதித்தததால், அது நாட்டின் ஜிடிபியில் ஏற்படுத்தப்போகும் கடுமையான விளைவுகளை குறித்து விடிய விடிய கலந்துரையாடல் நடத்தி ஓய்ந்து களைத்துப் போகும் அளவுக்கு விவாதித்ததால்...
இந்த பிரச்சனைகளை எல்லாம் விவாதிப்பதற்கோ செய்தி ஆக்குவதற்கோ... சங்கிகளின் அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வெஞ்சாமரம் வீசும் ஊடகங்களுக்கு நேரம் இல்லாமல் போயிருக்கலாம்...

தோழர் Sadan Thuckalai பதிவு



No comments

Powered by Blogger.