Header Ads



ரவிக்கு எப்படி நீதிமன்ற, தடையுத்தரவை பெற முடிந்தது...? கேள்வி எழுப்பும் சுஜீவ

இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி தொடர்பான கொடுக்கல், வாங்கல் நடந்த காலத்தில் வர்த்தக வங்கிகள் அன்றைய நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் பொறுப்பின் கீழ் இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இப்படியான நிலைமையில், ரவி கருணாநாயக்க எப்படி நீதிமன்றத்தில் தடையுத்தரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

கொள்ளையிட்டவர்கள் தற்போது விடுதலையாகி வருவதுடன் சுற்றியிருந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

வர்த்தக வங்கிகள் ரவி கருணாநாயக்கவின் பொறுப்பின் கீழ் இல்லை என்றால், சட்டமா அதிபர் ஏன் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்?.

இவ்வாறான நிலைமையில், பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய பிணை முறி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலைமையை காண முடியவில்லை.

இது சம்பந்தமாக புத்தகம் ஒன்றை எழுதியமைக்காக என்னை விமர்சித்து வருகின்றனர். எனது நிலைப்பாட்டை வெளியிட இடமளிக்கப்படாத வகையில் ஊடக சர்வாதிகாரம் செயற்பட்டது.

எது எப்படி இருந்த போதிலும் நாட்டின் அரசியல் மற்றும் நீதித்துறை செயற்படும் விதம் சம்பந்தமாக மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அப்படியில்லை என்றால், பயங்கரமான நிலைமை ஏற்படும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.