Header Ads



முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்க சூழ்ச்சி

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால் சிறுபான்மை சமூகத்தினுடைய விலாசத்தினை இல்லாமல் செய்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்றோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை கோழிக் கடை வீதியில் தன்னை ஆதரித்து புதன்கிழமை இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த காலங்களில் இந்த நாட்டில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து இருக்கின்றது. இந்த நாட்டில் நடைபெற்ற தேர்தலில் கேட்கின்ற வேட்பாளர்களுக்கு பயம், அச்சம் இருந்தது இல்லை. ஆனால் இம்முறை நடைபெறுகின்ற தேர்தலில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயம், அச்சம் இருக்கின்றது. விசேடமாக முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இருக்கின்றது.

என்ன பயம் என்றால் வரவுள்ள பாராளுமன்றத்தில் இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை, தமிழர்களை விசேடமாக முஸ்லிம்களை எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பதிலே எங்களுக்கு பயம் இருக்கின் காரணத்தினால் இவர்களின் கையாளுகை எப்படி வரப்போகின்றது என்று ஆரூடம் கூற முடியாத காரணத்தினால் நாங்கள் அச்சப்படுகின்றோம் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை என்ன செய்யப் போகின்றார்கள். அந்த அடிப்படையில் இந்த தேர்தலை ஒவ்வொரு மாவட்டத்திலும் கேட்கின்ற சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் அச்சப்படுகின்றார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால் சிறுபான்மை சமூகத்தினுடைய விலாசத்தினை இல்லாமல் செய்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்றோம்.

இவர்களது நீண்டநாள் அபிலாசை. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினை அடக்கி, ஒடுக்கி விட வேண்டும் என்று. தமிழ் மக்களினுடைய, விடுதலைப் புலிகளுடைய போராட்டத்தினை அடக்கி விட்டதாக ஒரு எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தினையும் இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் அவர்களையும் ஒடுக்கி விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இந்த நிலவரத்திற்கு நாம் கைமாறு செய்ய வேண்டிய பதில் என்பதை நாங்கள் உங்களிடத்தில் கேட்கின்றேன்.

சஹ்ரான் கைது முடிந்து விட்டது. இப்போது தேவை. அதனோடு சம்பந்தப்பட்டவர் இருக்கின்றார்கள் என்று சொல்வதற்கு இப்போது றிசாட் பதியூதினை இந்த பொதுத் தேர்தலில் அதிகபடியாக சிங்கள பகுதியில் வெல்ல வேண்டும் என்பதற்காக றிசாட் பதியூதினை சந்தைப்படுத்துகின்றார்கள். இவர்களது தமிழ்;, முஸ்லிம்கள் ஒப்பந்தகாரர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனத்தினை குறைக்க வியாளேந்திரன் போன்றவர்களை களமிறக்கியுள்ளனர். இது தமிழ் மக்களின் ஆசனத்தினை குறைக்க வேண்டும் என்று.

அதுபோன்று முஸ்லிம் ஆசனத்தினை குறைப்பதற்கு சகோதரர் ஹிஸ்புல்லா மற்றும் பசீர் சேகுதாவூத் இருவரையும் களமிறங்கியுள்ளனர். முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு அம்பாறையில் அதாவுல்லா, மயோன் முஸ்த்தபாவின் மகனையும் இறக்கி முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து முஸ்லிம் ஆசனத்தினை கிழக்கு மற்றும் வடக்க மாகாணத்தில் குறைவாக எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சூழ்ச்சிக்கு விலை போனவர் தான் சகோதரர் ஹிஸ்புல்லா.

ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்டத்திலுள்டள முஸ்லிம் மக்களை மடையர்கள் என்று நினைத்து அரசியல் செய்கின்றார். மக்கள் சற்று யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்களின் உரிமைக்காக வந்த கட்சி அரிசி கை மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வாக்கு பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யாரெல்லாம் உங்களிடத்தில் பொருட்கள் பணங்கள் தருகின்றார்களோ அவைகளெல்லாம் அவர்கள் வேர்வை சிந்தி உழைத்த பணம் அல்ல. மட்டக்களப்பு மாவட்தத்திலுள்ள முஸ்லிம்களின் தலைகளை காட்டி சவூதி அரசிடம் இருந்து அல்லது வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம் தனவந்தர்களிடம் இருந்து ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றோம் என்று பெற்று கராமாக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தினை எங்களுக்கு இப்போது பொருள் மற்றும் பணம் வழங்கல் செய்கின்றார்கள்.

ஜனநாயக உரிமை என்பது உங்களது கருவையும் விட மேலானது என்பதை மறந்து விடாதீர்கள். கர்ப்பை எவ்வளவு மதிக்கின்றீர்களோ அவ்வளவுக்கு உங்களது வாக்குரிமை அதைவிட உச்சமானது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே ஹிஸ்புல்லாவுக்கு தெரியும் நான் வெற்றிபெற போவதில்லை என்று. ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி என்று களமிறங்கினாரோ அதேபோன்று இந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைக்க வேண்டும் என்பதற்காக வியாளேந்திரன் பேதன்ற கூலிகள் களமிறக்கப்பட்டாரோ அதேபோன்று முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக ஹிஸ்புல்லா அரசாங்கத்தின் கூலியாக இறக்கபபட்டுள்ளார் என்பதை மறந்து விடாதீர்கள் என்றார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.தையிப், சட்டத்தரணி எம்.ராசிக், மத்திய குழு செயலாளர் ஏ.அக்பர் மற்றும் கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. மடியில கனம் இருந்தா வழியில் பயமிருக்கும்.இது எமது பேச்சு வழக்கில் ஒரு பழமொழி.சமூகத்தை இயன்றவரை காட்டிக் கொடுத்து அரசியல் செய்துவிட்டு, ஒப்பாரி வைக்கும் அளவிற்கு கீழ் நிலையில் சென்று, தற்போது பயம்பற்றி பேசுகிறார்கள்.
    சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உரியதல்ல.நீங்கள் எங்காவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். சமூகம் இறையருளால் பாதுகாக்கப்படும்.
    சிலரது உச்ச எண்ணம் "வண்டிலின் கீழால் செல்லும் நாயை" விட மோசமான நிலையை அண்மித்துள்ளது.

    ReplyDelete
  2. ITHUVARAIKAALAMUM, PARALUMANTATHIL KATHIRAIKALAI SHHODAAKI, MUSLIMGALUKKU
    ETHANAI THENGAIKAL, THURUVIKODUTHULLEERKAL???
    ITHUKKUTHAAN MUSLIMGALIN PIRATHINITHITHUVAMAA?

    ReplyDelete

Powered by Blogger.