July 18, 2020

'முஸ்லிம் மொட்டுக்கள்' மீது, அஷாத் சாலி விசனம்

- ஊடகப்பிரிவு -

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை, மலிவான விலைகளுக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை "முஸ்லிம் மொட்டுக்கள்" ஆரம்பித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி விசனம் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட அக்கிரமங்கள், அழிவுகள், அடக்குமுறைகளுக்குப் பரிகாரமாக அரிசி, சட்டி, பானை, தையல் மெஷின்களை வழங்கும் இவர்களின் புதிய போக்குகள், "ஈமான்" மற்றும் "கலிமாவை" அடகு வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளாகும்.

முஸ்லிம்களை இவ்வாறு மலினமாக வழிநடத்தி, ராஜபக்ஷக்களின் விசுவாசிகளாவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இந்நிலைமைகளை தொடரவிட்டால், மெதமுலானையை தொழும் திசையாக மாற்றுவற்கும் இந்த முஸ்லிம் மொட்டுக்கள் தயங்கப்போவதில்லை. எனவே, இந்த வழிகேட்டு அரசியல் கலாசாரத்தை முஸ்லிம்கள் தோற்கடிப்பது அவசியம்.

ஒரு குடும்பத்தை மாத்திரம், தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்துவதற்கு இவர்கள் முயற்சிப்பது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, தனிநபர் வழிபாட்டுக்கே வழிகோலும். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நெருப்பில் சுட்டெரிக்கும், இஸ்லாத்துக்கு எதிரான கொடிய அரசு, இலங்கையைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லை. சிலர், தங்களது குடும்ப நலன்களுக்காக இதைக் கூட மறக்குமாறும் மன்னிக்குமாறும் கோருகின்றனர்.

அதிகாரமும் சுகபோகமும் தலைக்கேறிய இவ்வாறான முஸ்லிம் மொட்டுக்களின் போக்குகளால், முஸ்லிம் சமூகம் கொதிப்படைந்துள்ளது. கொசுவின் இறகளவேனும் பெறுமதியில்லாத, இவ்வுலகின் அற்ப, சொற்ப சுகங்களுக்காக, எந்த முஸ்லிமும் "ஈமானை" விட்டுவிடப் போவதில்லை.

எனவே, சட்டி, பானைகள் வழங்கி, மெதமுலானையைத் தொழும் திசையாக மாற்றும் முஸ்லிம் மொட்டுக்களின் முயற்சிகள், ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. பள்ளிவாசல்களைப் பாதுகாக்க, கண்ணியமான "பர்தாவுடைய" வாழ்க்கையைப் பாதுகாக்க, முஸ்லிம்களின் "ஈமானைப்" பாதுகாக்க, குடும்ப வாரிசு அரசியலைத் தோற்கடிக்க அணிதிரளும் காலத்தேவையில், முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும்” என்றும் அஷாத் சாலி அவசர அழைப்பு விடுத்துள் ளார்.

3 கருத்துரைகள்:

Azad Sally is only an “empty vessel that makes the most sound”. Can you call this loud mouthed politician a MUSLIM who follows the covenant of Islam? One of Azad Sally's political deceptions is to make "big noises" on issues concerning the Muslim community, but nothing happens at the end, other than the Muslim community being pushed into social and political turmoil and disaster.
He is NOT second to the like of Gnanasara Thero of the BBS who has and is violating all the principles of Buddhism. What NOT has Azad Sally done what Gnanasara Thero has done? His press conference statements about Gnanasara Thero and Mahinda Rajapaksa/Gotabaya Rajapaksa/SLPP is another "political stage drama" conducted to hoodwink the poor Muslim community and to rob the votes of the humble Muslims at the next general elections expected in August this year, Insha Allah. It is like the SOUND OF AN EMPTY VESSEL - just like the MOUTH OF GNANASARA THERO. He was in the centre of activities in the Haji pilgrimage quota allocations in 2010, where he screwed all the "Hajaathikals" thousands of rupees as a special levy that became a big scandal. No one knows what happened to this money. It is rumoured that his brother Ryaz Sally, has had very close connections with the Bodu Bala Sena and has revealed quite a lot of vital information of Muslim business persons, Travel Agents, Haj Group Operators and provided information about the financial status of the Muslim Community, which have become detrimental to our community in recent time, it is alleged. Just during the run-up to the Presidential Elections, he slandered former Mahinda Rajapaksa, was found fault, but escaped begging pardon (in writing). Muslims cannot also forget the Berzedes Benz racket, the CWE warehoues scandal he was involved during the Yahapalana government. A New Political Force arising from within the Muslim Community, especially from among the Youth should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah. By the grace of God AllMighty Allah, the Muslim Community can defend itself from the likes of the BBS and Gnanasara Thera on their great strength and belief in God AllMighty Allah.
Noor Nizam, Convener - The Muslim Voice.

நல்லாட்சியில் எங்கள போட்டு அடிக்கும் போது எங்கடா இருந்தாய்.. போ போய் படு ஞானசாரவோட.. தங்கச்சியையும் அனுப்பி வை..

ஆஸாத் ஸாலி அவர்களே, உங்களுடைய அரசியல் எங்களுக்குத் தொியும். உங்களுடைய சொந்த நலனுக்காக எத்தனையோ கட்சிக்குத் தாவினீர்கள். இப்போது தனியாளாக சொந்தக் கட்சி நடத்துகின்றீர்கள். அரசியலுக்காக மார்க்கத்தை விற்காதீர்கள். மார்க்கம் பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லையென்பதை மக்கள் அறிவாார்கள். மெமுலனையை யாரும் தொழும் திசையாக மாற்றிக் கொள்ளவில்லை. புனித கஃபதுல்லாஹ்தான் முஸ்லிம்களின் கிப்லா. உங்களுக்கு எப்படியோ தொியாது. வெட்கங்கெட்ட அரசியல்வாதியாக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாம். ரணிலுக்குக் கூஜா தூக்கினீர்கள். பலிக்கவில்லை. மைத்திரிக்குக் கூஜா தூக்கினீர்கள். ஆளுநர் பட்டமும் வெளிநாட்டுச் சவாரியும் சுகபோகமும் கிடைத்தது. உங்களுடைய போலி ஆட்டம் ராஜபக்ஷக்களிடம் பலிக்காது என்பதற்காகத் தூற்றுகின்றீர்கள். கேவலம்! நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை.

Post a comment