Header Ads



இந்த கட்சி பிடிக்கவில்லை என்றால் வேறு கட்சி உருவாக்கி போட்டியிடுங்கள், என்னால் அதனை நிறுத்த முடியாது


ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்துள்ளதாக இதன்போது ரணில் விக்ரசிங்க குறிப்பிட்டார்.

ஒழுக்காற்று விசாரணைகளின் போது கட்சியின் சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 54 பிரதேச சபை உறுப்பினர்களை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நீண்ட காலம் சிந்தித்து எடுக்கப்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த கட்சி பிடிக்கவில்லை என்றால் லலித் அத்துலத்முதலி செய்ததைப் போன்று வேறு கட்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டு அங்கு சென்று தேர்தலில் போட்டியிடுங்கள். என்னால் அதனை நிறுத்த முடியாது. கட்சியிலிருந்து விலகிச் செல்லுங்கள். அதனையே லலித் அத்துலத்முதலி செய்தார். எனவே, இவ்விடத்தில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள் அங்கு கட்சி ஒன்றை உருவாக்க வேண்டுமாக இருந்தால், அதனை செய்யுங்கள். தேவை என்றால் தாமரை மொட்டுடன் இணைந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாமல் இவ்விடத்திற்கு வந்து நாமே ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறி எம்மை பாதிப்படையச் செய்ய வேண்டாம். அது செய்நன்றி அல்ல

என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

1 comment:

  1. இவன் எப்படி பதவி திமிரு பிடித்தவன் என்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் இவனுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார்கள் தலைமைத்துவத்தை விட்டு விலகும்படி ஆனால் அதன் பிறகு நரி தந்திரத்தால் இன்னும் சில கிழமைகளில் அதட்கான ஏட்பாடுகள் செய்யப்படும் என்றும் பிறகு சில மாதமளவில் மற்றம் செய்யப்படும் என்றும் அதன் பிறகு சஜித்தின் தலைமையில் புதிய தேர்தல் ஒன்றை விரும்பினால் அமைக்க முடியும் என்றும்,இப்போது அது எல்லாம் சரிவராது என்று சொல்லி முழு கட்சியும் பிரட்டி போடும் சதியை செய்றான்.

    ReplyDelete

Powered by Blogger.