Header Ads



பிரதமருடன் இன்றைய பேச்சு வெற்றி - பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்

தமது பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணங்கியுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று -03- இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று (03) இடம்பெற்றது. 

இதன்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பளுதூக்கிகளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, தமது பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிற்சங்கம் தீர்மானிததுள்ளது. 

இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல் ஒன்றுக்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் (02) துறைமுக ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.