Header Ads



ஆட்ட நிர்ணய சதி, விசாரணையை நிறுத்தியமை பிழையென மஹிந்தானந்த குற்றச்சாட்டு

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை.

ஆகையால் இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விளையாட்டு குற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவு தீர்மானிதிருந்தது.

இதற்க்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மஹிந்தானந்த அளுத்கமகே ஊடக சந்திப்பென்றை முன்னெடுத்திருந்தார்.

இதன் போது பேசிய அவர்,

என்னால் கடந்த நாட்களில்,  20011 ஆண்டு உலககிண்ம் குறித்து குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டது, இவ் குற்றச்சாட்டானது இதற்கு முன்பும் இரண்டு முறை என்னால் முன்வைக்கப்பட்டது. இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர்களும், விளையாட்டு வீரர்களும், பேசியிருந்தார்கள்.

நான் இதை பற்றி கூறுவதற்கு காரணம் என்னிடம்  உள்ள, 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், ஐ.சி.சி யின் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரி மூலம் அப்போது விளையாட்டு துறை அமைச்சராக இருந்த ஹரேன் பிரனான்டோவுக்கு  அனுப்பி வைக்கப்பட்ட கடிதமாகும்.

இந்தகடிதத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 10 நாடுகளில் அதிக ஊழல் மோசடி இடம்பெறும் நாடு இலங்கை என்றும் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு நான் தெரிவித்ததையடுத்து, இதனை மையப்படுத்தி பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்று கொண்டனர். இதன்  போது நான் என்னிம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் பொலிஸாரிடம் முன் வைத்ததுடன் இவ்விடயத்தில், விளையாட்டு வீரர்கள் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை என மிக தெளிவாக தெரிவித்திருந்தேன்.

எனினும் எனக்கு விளங்கவில்லை பெலிஸார், இது தொடர்பாக முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மற்றும் உபுல் தரங்க, அப்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைத்தது ஏன் என்று.

இதே வேளை, போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதால்  இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதாக விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவின் அதிகாரி என்னிடம் தெரிவித்திருந்தார்  2019 ஆம் ஆண்டு 24 இலக்க விளையாட்டு தொடர்பான குற்றச் செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் இவ் விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ் சம்பவம்  2011 இல் இடம்பெற்றுள்ளது. 

எனவே குமார் சங்கக்காரவின் சட்டதரணிகள் இவ் விசாரணை பிழையானது இதற்கு நாங்கள் பதிலளிக்க கட்டுபடவில்லை என தெரிவித்ததையடுத்து தான் பொலிஸாருக்கும் விளங்கியுள்ளது அவர்கள் ஆரம்பித்துள்ள விசாரணை பிழையானது என்று.

எனவே பொலிஸார் பிழையான முறையில் விசாரணையை முன்னெடுத்து விட்டு, பொலிஸாருக்கு கூறமுடியாது போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறாமையினால், இந்த விசாரணைகளை நிறுத்தி வைப்பதாக, பொலிஸாரின் செயல் பிழையானது.

இதுவரை அப்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரிகளிடம் வாக்கு மூலம் பெறவில்லை, இரண்டு நாட்களில் விசாரணையை நிறைவு செய்துவிட்டனர். ஒருவரை மட்டும் விசாரணைக்கு உட்படுத்தி எவ்வாறு அவர்களால் இப்படி செய்யமுடியும். 

எனவே நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் பெலிஸாரின் இவ் செயற்பாடு குறித்து விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும்.

இதேவை ஆட்ட நிர்ணயசதி தொடர்பில்,  ஐ.சி.சிக்கு நான் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்துள்ளேன், எனவே இது குறித்த மேலதிக விசாரணையை ஐ.சி.சி முன்னெடுக்க வேண்டும் என நான் கேட்டுகொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

எனினும், 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.