Header Ads



ரணில், சஜித்துக்கு முஸ்லிம்கள் சிறந்த பாடம் புகட்டுவர் - 
மர்ஜான் பளீல்

முஸ்லிம் சமூகத்தை காட்டிக்ெகாடுத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் செயற்பாடுகளை எமது சமூக அரசியல்வாதிகள் கைவிட வேண்டுமென என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார். 


பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருவளை மருதானை, சீனன்கோட்டை பிரதேச முஸ்லிம் பகுதிகளில் இடம்பெற்ற பிரசார கூட்ட ங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மர்ஜான் பளீல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்து உரையாற்றிய அவர், 

சமூகத்தை காட்டிக்ெகாடுத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் பேருவளை தொகுதி அரசியல்வாதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் எமது சமூகம் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும். இவர்களின் செயற்பாடுகளாலே முஸ்லிம் சமூகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. 
அன்று தர்கா நகர் சம்பவத்தைக்ெகாண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பினார்களோ அதே பேருவளைத் தொகுதி மக்கள் இம்முறை தேர்தலில் ரணில்,சஜித் தரப்பினருக்கு சிறந்த பாடத்தை புகட்ட முன்வந்துள்ளதை பாராட்டுகிறேன்.

தர்கா நகர் மக்களின் செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்படுவதை பாராட்டுகிறேன். பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இனவாதம் இல்லை என்பதை அவர்கள் விளங்கி விட்டனர். உண்மையான இனவாதிகள் யார் என்பதையும் அவர்கள் இன்று தெரிந்து வைத்துள்ளனர். 


தர்கா நகர் சம்பவத்துக்கு பின்னால் இருந்த ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரனவக்க போன்ற இனவாதிகள் இன்று யாருடன் கூட்டு சேர்ந்துள்ளனர் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும். மீண்டும் நாம் யானைக்கோ அல்லது தொலைபேசிக்ேகா வாக்களிப்பதை 'ஹராம்' என நினைத்துக்ெகாள்ளுங்கள். 


களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அர​ைச அதிகப்படியான வாக்குகளினால் வெற்றிபெறச்செய்து முழு இலங்கைக்கும் முன்மாதிரியான செய்தியை வழங்கும் எனவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.

2 comments:

  1. மும்மாதிரியஹா ஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்,என்று முஸ்லீம் குரல் ("The Muslim Voice") 2015 முதல் இருந்து இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் மர்ஜன் ஹஜியார் சொல்லி வருகிறார். களுத்துறை முஸ்லீம் வாக்காளர்கள் மர்ஜன் ஹஜியரை ஆதரிக்க வேண்டும், அவருக்கு ஆதரவாக எஸ்.எல்.பி.பி.க்கு ஒருமனதாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். இதைத்தான் கோதபய ராஜபக்ஷ புதிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், எங்கள் “மாத்ருபூமியா” என்கிற மக்களிடமிருந்தும் கேட்கிறார். இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய இது சரியான தருணம். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ். மறைந்த அஸ்வர் ஹஜியாரின் தலைமையில் செயல்பட்ட (SLPP) எஸ்.எல்.பி.பி முஸ்லிம் பிரிவு அணியை ஓரங்கட்டப்படாமல் ஒன்றாக அவர்களை மரியாதையுடன் நடத்துவது முக்கியம், ஏனென்றால் அவர்கள் 2005, 2010 மற்றும் 2015 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மஹிந்தா மற்றும் கோட்டபயா, பசில் ராஜபக்ஷவுடன் நின்ற SLFP / SLPP முஸ்லீம் ஆதரவாளர்கள். அவர்கள் 2015 ல் 300,000-350,000 முஸ்லீம் வாக்குகளைப் பெற்றறு கொடுக்க காரணம்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. Ha ha ha.... Joke of the day....

    ReplyDelete

Powered by Blogger.