July 26, 2020

இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நிலைக்க, எமது சமூகம் பழையவற்றை மறந்து ஆதரவு வழங்க வேண்டும்


சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார். பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

இன்று எமது சமூக இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இதற்கு விரைவாக முடிவு காணப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். 

இல்லாவிட்டால் அதன் தாக்கம் அதிகரித்து சமூக உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகம் சீர்கேட்டில் செல்லும். எமது சிறார்களின் எதிர்காலம் சீர்கெடும். ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கம் போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்தே அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த அரசாங்கம் போதைப்பொருள் வர்த்தகர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினார்கள்.இதனால் தான் நாட்டிலும் சமூகத்திலும் பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டன. அப்படியான யுகத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இன்றைய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் எமது சமூகம் பழையவற்றை மறந்து ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும். 

எமது சமூகத்தையும் இந்த போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்தின் நேரடி உதவிகள் தேவைப்படுகின்றன என்றார்.

அஜ்வாத் பாஸி  

2 கருத்துரைகள்:

இவனைப்போன்ற சோத்து மாடுகளுக்கு தேசிய பட்டியல் கிடைப்பதற்காக சமூகத்தையே பலி கொடுக்க நினைக்கின்றார்கள். நிச்சயமாக இவர்கள் இறைவனின் புறத்தில் நயவஞ்சகர்களே

எஸ்.எல்.பி.பி தேசிய பட்டியல் No: 11, வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் "தி முஸ்லீம் குரல்" முழுமையாக ஆதரிக்கிறது. ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக மர்ஜன் ஹஜியரைப் பற்றி முன்வைத்ததை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. மர்ஜன் ஹஜியார் தனது மறைந்த தந்தையின் அரசியல் பார்வை மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றுவார். களுத்துறை மாவட்டம் / பெருவெலா / அலுத்காமாவில் உள்ள முஸ்லீம் வாக்கு வங்கி மர்ஜன் ஹாஜியரின் தாழ்மையான மற்றும் யதார்த்தமான கோரிக்கையை ஆதரிக்க "ஒருமனதாக" முடிவு செய்து, வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில், இன்ஷா அல்லாஹ், எஸ்.எல்.பி.பி / "இலங்கை நிதாஸ் பொடுஜனா சந்தனயா" க்கு வாக்களிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இளம் மற்றும் புதிய அரசியல் ஆர்வலர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சிறுபான்மையினரின் சமூகங்களில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முன்வர வேண்டும். அவர்கள் நேர்மையாகவும் முஸ்லிம் வாக்குகளை ஒன்றிணைக்கவும் முடியும் என்பது கோட்டபய ராஜபக்ஷாவின் அரசியல் பார்வை. "புதிய முஸ்லீம் அரசியல் கலாச்சாரத்தை" உருவாக்கவும், முஸ்லீம் வாக்குகளை
சேகரிக்கவும் அவர்களரள் முடியும்.
நேர்மையான ஒரு அரசியல் சக்தியை உருவாக்கும் மற்றும் "சுத்தமான" முஸ்லீம் அரசியல்வாதிகளை உருவாக்கும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க எண்ணங்கள் முஸ்லீம்களிடையே
இருக்கிறது.
முஸ்லீம் வாக்கு வங்கி அதன் சொந்த முடிவுகளை
"இப்போது" செயல்பட முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 300,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாராளுமன்றங்களுக்கான எம்.பி.யின் தேசிய பட்டியல் நியமனங்களில் "கோட்டபய ராஜபக்ஷ" உதவி "மர்ஜன் ஹஜியார், எல்லாம் வல்ல அல்லாஹ் மற்றும் கோதபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் உதவியுடன் ஒரு National List slot "ஸ்லாட்"மூலம் அந்த வாய்ப்பை உருவாக்க முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஏற்கனவே "பொட்டுவா" க்கு வாக்களித்த 300,000 வாக்காளர்கள், இப்போது கிட்டத்தட்ட 650,000 முஸ்லிம் வாக்காளர்கள் பொட்டுவாவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளர ர்கள். இந்த வாக்குகளை பொட்டுவாவுக்கு பெற மர்ஜன் ஹஜியரும் ஒரு காரணமாக இருப்பார், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a comment