Header Ads



கொழும்பில் உள்ள இந்திய, அமெரிக்க தூதரகங்களே, தேர்தல் முடிவை தீர்மானிக்கின்றன - அனுரகுமார


இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்பவே நாட்டின் தலைவர்களும் அரசாங்கங்களும் உருவாக்கப்படுகின்றன என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேகிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் தேர்தலில் வாக்களித்தாலும்,கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் அமெரிக்க தூதரகமும் எடுக்கும் முடிவுகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பொது எம்.சி.சி உடன்படிக்கையை இடைநிறுத்துவதற்காக கோத்தாபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவை தெரிவு செய்த பின்னர் மக்கள் அவர் எம்.சி.சி உடன்படிக்கையை இரத்துச்செய்வார் என எதிர்பார்த்தபோதிலும் இன்னமும் எம்.சி.சி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் ஜே.வி.பியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னர் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதியும் அமெரிக்க தூதரகமும் ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க தூதரகம் தற்போது உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 மக்கள் அரசாங்கங்களை உருவாக்குகின்றார்கள் என்றால் மக்களின் தேவைகளை அந்த அரசாங்கங்கள் நிறைவேற்றவேண்டும் எனினும் நாடு வெளிநாட்டு இராஜதந்திரிகள் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.