Header Ads



புலஸ்தினி/சாரா இந்திய புலனாய்வு பிரிவிற்காக செயற்பட்டார் - அரசபுலனாய்வு பிரிவின் அதிகாரி


(தினக்குரல்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்கொலை குண்டுதாரியொருவரின் மனைவி இந்திய புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அரசபுலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்

.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது குறித்த முன்கூட்டிய தகவல்களை கட்டுவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி சாரா ஜெஸ்மின் – புலத்ஸ்சினி இராஜேந்திரன் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு வழங்கினார் என வெளியான தகவல்களை அரசபுலனாய்வு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த முக்கியமான விடயங்களை ஜஹ்ரானின் குழுவிற்குள் இருந்து இந்திய புலனாய்வு அமைப்பு பெற்றுள்ளது என தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரி இதன் காரணமாகவே இந்தியாவினால் முன்கூட்டியே எச்சரிக்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.

சாரா என அழைக்கப்படும் புலத்ஸ்சினி ராஜேந்திரன் 2019 ஏப்பிரல் 26 ம் திகதி சாய்ந்மருதில் மறைவிடமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுவிட்டார் என முதலில் கருதப்பட்டபோதிலும், எனினும் அவர் இந்தியாவுக்கு கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரா ஒரு இந்து ஆனால் பின்னர் மதம்மாறி கட்டுவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரி ஹசுன்என்பவரைதிருமணம் செய்தார் என புலனாய்வு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சாரா என அழைக்கப்படும் புலத்ஸ்சினி இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் நடமாடியுள்ளார்,புலஸ்தினி ராஜேந்திரன் என்ற பெயரிலும் சாரா ஜெஸ்மின் என்ற பெயரிலும் அவர் நடமாடியுள்ளார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2019 ஏப்பிரல் 26 ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சாரா உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது ஆனால் சமீபத்தில் அரசபகுபாய்வு திணைக்களத்தின் மரபணுபரிசோதனைகள் சாரா அந்த இடத்திலிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளன என புலனாய்வு துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 26ம் திகதிக்கு பின்னர் சாராவை உயிருடன் பார்த்தவர்கள் குறித்த தகவல்களை நான் தேசிய புலனாய்வு பிரிவின் தலைமையகத்துக்கு வழங்கியிருந்தேன் என அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஏப்பிரல் இரண்டாம் மற்றும் 20 ம் திகதிகளில் முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது என்றால் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்னு யார் தகவல்களை வழங்கியிருப்பார்கள் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் புலனாய்வு பிரிவு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜஹ்ரானுக்கு நெருக்கமாகயிருந்தவர்களே இந்த தகவலை வழங்கியிருக்க முடியும் ஏனென்றால் அவர்களுக்கே தாக்குதல் நிச்சயமாக நடக்கப்போகின்றது என்பது தெரிந்திருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை தவிர ஜஹ்ரானின் மனைவி,நவ்வர் மௌலவி ஆகியோருக்கே தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது தெரிந்திருந்தது தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கூட இதனை அறிந்திருக்கவில்லை என தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவ்விதமிருக்க, மொத்த சமூகத்தையும் சந்தேகத்த்டுடன் பார்ப்பதும் குற்றம் சாட்டுவதும் ஈனத்தனம் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.