Header Ads



இந்தத் தேர்தல் மிகவும், சோம்பேறித்தனமாக இருக்கிறது - பிரதமர் மஹிந்த


கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று (30) நாவலப்பிட்டியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,

கடந்த  5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் ஜனாதிபதியும், பிரதமரும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதி கூறுவதை பிரதமரும், பிரதமர் கூறுவதை ஜனாதிபதியும் செய்வதில்லை என்றார்.

இந்தத் தேர்தலானது ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே போட்டியிடும் தேர்தலாகவே தனக்கு விளங்குவதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த, எதிர்க்கட்சி ஒன்று இல்லாவிட்டால் அது மிகவும் சோம்பலை ஏற்படுத்தும் என்றார்.

தனது 50 வருட அரசியல் அனுபவத்தில் அனைத்து தேர்தல்களிலும் பாரிய போட்டி காணப்பட்டது. சவாலகவும் இருந்தது. எனினும் இம்முறை எவ்வித போட்டியும் எமக்கில்லை என்றார்.

    

2 comments:

  1. (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
    (அல்குர்ஆன் : 8:43)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. அரசியல்வாதிகளின் உளரல்களால் சாதாரண பொதுமக்கள் நையப்புடைக்கப்படுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.