Header Ads



கொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஆதரவு வழங்கு முகமாக குருநாகல் மாவட்ட முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்   (11) குருநாகல் 'புளூ ஸ்கை' ஹோட்டலில் நடைபெற்றது.

அங்கு குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றும் போது,

கொரோனா  தொற்றினால் உயிரிழந்தவர்களுடைய எல்லோருடைய உடம்பையும் தனகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை வைத்தியர்கள் தான்  முன் வைத்தார்கள்.

சிங்களவர்கள்,  சிங்கள கிறிஸ்தவர்கள், முஸிம்கள், இந்துக்கள் எல்லோரும் எரிக்கப்பட வேண்டும் என்ற  பொதுவான நியதி ஒன்று கொண்டு வரப்பட்டது. இவ்வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியது என்ன? இது பிழையானது என்று கூறினர். சமய ரீதியில் பிழையெனச் சுட்டிக் காட்டிக் காட்டினார். முற்றாக எரிக்க வேண்டாம் என்று கூறினார். கிறிஸ்தவ சமயத்தவர்களும் எரிப்பதில்லை. கிறிஸ்தவ சமயப்படியும் உடல் எரிக்க அனுமதியில்லை.  இது பிழை என்று கிறிஸ்தவர் எவரும் கூற வில்லை. 

அவ்வாறாயின் ஒரு கருத்தின் அடிப்படையில் சிங்கள கிறிஸ்தவர்கள்  பௌத்தர்கள், இந்துகள் என அனைவரும் தனகம் செய்கின்றோம். ஆனால் ரவூப் ஹக்கீம் நினைத்தபடி முஸ்லிம் மட்டும் எரிப்பதில்லை என வைத்துக் கொள்வோம். இந்நேரத்தில் ரவூப் ஹக்கீம் எதைக் கூறுவார். இதேவேளையில் முஸ்லிம்களுக்கும் மத்தியில் கொரோனா தொற்று ஏற்பட வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களுடைய உடலை மட்டும் எரிக்கவில்லை.  கொரோனா தொற்றினால் முஸ்லிம்கள் உயிரிழக்கப்படுவார்கள் என்று கூற மாட்டாரா? எவ்வாறு சரி அரசியலைச் செய்து கொள்ளப் பார்க்கின்றனர். எவ்வாறு சரி சமயத்தை விற்பனை செய்து தான் அரசியல் செய்ய முற்படுகின்றனர். இது தான் உண்மை. நீங்கள் சரியாக யோசனை செய்து ஒரு தீர்மானத்தை எடுங்கள்.

வீட்டுக்குச் சென்று உதவி செய்யுங்கள். நெருக்கமான நட்புறவை வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

4 comments:



  1. ஐக்கிய நாடுகள் சபைக்கு மேலால் செல்பவர்கள் இவர்கள். தாமகத் திருந்த வேண்டியவர்கள்.

    இஸ்லாத்தில், நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவருக்கு (கலீஃபா) மக்களிடமிருந்தே (உம்மா) அதிகாரம் வழங்கப்படும்; அவர் தம் பணிகளை மக்களின் திருப்தியுடனேயே மேற்கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (நூல்: முஸ்லிம்)

    ReplyDelete
  2. லூசா இவன்...

    ReplyDelete
  3. When the government want to release the prisoners and arrest opponents you have used the power but the corona virus issue you listen to doctors to burn the body. But the doctors (mean JMO) has not followed WHO guide line on this issue due to hidden political hand.

    ReplyDelete
  4. செய்றத எல்லாம் செய்து போட்டு இப்ப எலக்சன் வர வைத்தியர்கள் மேல பழி.
    எங்கள எல்லாம் பாத்தா மடயன் மாதிரியா தெரியுது ஒங்களுக்கு?

    ReplyDelete

Powered by Blogger.