Header Ads



நாட்டில் உள்ள பிரதான குற்றவாளிகள், மறைந்திருக்கும் இடம் பாராளுமன்றமே ஆகும்

நாட்டில் உள்ள பிரதான குற்றவாளிகள் மறைந்திருக்கும் இடமாக நாடாளுமன்றம் மாறியுள்ளது என தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தில் இருப்பவர்களை வெறுப்புடன் பார்ப்பதற்கு இதுவே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இதனால், அதற்கான பொறுப்பு மக்களுக்கு இருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. பனூ உமைய்யா கலீஃபாக்களில் ஒருவர்தான் அப்துல் மலிக் பின் மர்வான்!

    இவருடைய ஆட்சிமுறை பற்றி மக்கள் குறை பேசிக்கொண்டிருந்தது இவரது காதுகளுக்கு எட்டியது.

    உடனே அவர் தன்னுடைய அவைப் பிரதானிகளையும் முக்கிய பிரமுகர்களையும் ஒன்றுதிரட்டினார். அவர்களிடம் கேட்டார்:

    ‘மக்களே! நான் உங்களுக்கு அபூ பக்ர் (ரளியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர் (ரளியல்லாஹு அன்ஹு) போன்று சிறந்த ஆட்சியாளனாகத் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா?’

    அனைவரும் ஒருமித்த குரலில் ‘ஆம்’ என்று பதில் அளித்தார்கள்!

    பிறகு அப்துல் மலிக் சொன்னார்: ‘அப்படியானால் நீங்கள் எனக்கு – அபூ பக்ர் (ரளியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர் (ரளியல்லாஹு அன்ஹு) இருவரும் பெற்றிருந்ததைப் போன்ற சிறந்த பொதுமக்களாகத் திகழுங்களேன்!’

    அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன். மக்கள் எப்படிப் பட்டவர்களோ அப்படித்தான் அவர்களுடைய ஆட்சியாளர்களையும் அமைக்கிறான்! மக்கள் கெட்டவர்கள் எனில் ஆட்சியாளர்களும் கெட்டவர்கள்தான். மக்கள் நல்லவர்கள் எனில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆட்சியாளர்களும் நல்லவர்களாய் திகழ்வார்கள்!

    ஆயினும் ஆளுவோர் திருந்திவிட்டால் மக்களும் திருந்திவிடுவர் எனும் ரீதியில் ஆட்சியாளர்கள் நல்லவர்களாய் இருக்க வேண்டுமென்பதுதான் அனைத்திற்கும் அடிப்படை! ஏனெனில் ஆட்சியாளர்களிடத்தில் அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி சீர்திருத்த நடவடிக்கையைச் சிறப்பாய் மேற்கொள்வது அவர்களுக்கு எளிது. நெறிபிறழ்ந்து செல்வோரை நெறிப்படுத்தவும் அநீதியும் அட்டூழியமும் செய்வோரைத் தடுத்து நிறுத்தவும் ஆட்சியாளர்களால் இலகுவாக முடியும்!

    ReplyDelete
  2. When people become bad in a society,,, God also appoint such leaders on them..

    ReplyDelete
  3. APPADI ENRAAL, ITHANAI SHOLKINRA
    ANURA KUMARAVUM, ATHEY PONRU ORUVAR THHAANEI.

    ReplyDelete

Powered by Blogger.