Header Ads



செல்லாக்காசாகுமா கண்டி மாவட்ட, சுயேச்சை குழு வாக்குகள்...?

- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்-

இன்று கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு வெற்றி பெறுவதற்கு எத்தனை வாக்குகள் பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்கட்டும் 5 வீத வாக்குகளை பெற்று வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான குறைந்த தகுதியைப் பெற முடியுமா என்பதைப் ஒருபுறம் சிந்தியுங்கள்.

இதற்கான நல்ல உதாரணம் 2000  ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் ஆகும். இத்தேர்தலில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் கீழ் போட்டியிட்டது .அன்றைய தேர்தலில பிரச்சார பணிகளின்போது மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் காலமானார்கள். ரவூப் ஹக்கீம் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி கட்சியானது மிகப்பிரபலமான வேட்பாளர்களை கொண்டே கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டது. டாக்டர் மஹ்ரூப் , புரகான் ஹாஜியார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மர்ஜான், யட்டி நுவர முன்னாள் பிரதேச சபை தலைவர் பாயிஸ், பிரபல ஆசிரியர் ராஜரத்தினம் இப்படி பிரபலம் வாய்ந்த பலர் போட்டியிட்டனர் .

இவர்கள் அனைவரும் முழு மூச்சுடன் செயல்பட்டனர். ஆனால் அத்தேர்தலில்  தேசிய ஐக்கிய முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் 5 .29 வீதம் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அந்தத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி குழுவிற்கு ஆளும் கட்சியினால் அல்லது எதிர்க்கட்சசியினால்  எந்தவிதமான எதிர்ப்பும் இருக்கவில்லை. அவர்களின் ஆதரவு மறைமுகமாக இருந்தது என்றே கூறலாம்.அதுமட்டுமல்ல  அஷ்ரபின் மறைவின் பின்னர் எழுந்த அனுதாப அலை பட்டியல் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிட்டமை  என்பனவும் தேசிய ஐக்கிய முன்னணி ஒரு வேட்பாளரை வெல்வதற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றைய சுயேச்சை குழு அவ்வாறான வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தவில்லை .அக்குரணை பிரதேச சபை தலைவர்  மட்டுமே ஓரளவு பிரபல்யம் வாய்ந்தவராக இருக்கின்றார். ஏனைய வேட்பாளர்கள் பிரபல்யம் வாய்ந்தவராகவோ பெருமளவிலான வாக்கு வங்கிகளை கொண்டவர்களாகவோ தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் இன்று கண்டி மாவட்டத்தின் நிலை மாறுபட்டு இருக்கின்றது. ஆளும் மொட்டுக் கட்சியினருக்கு வாக்களிப்பதற்காக முஸ்லீம்கள் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டு தனித்தனியாக போட்டியிடுகின்றது.JVP தலைமையிலான கூட்டணியும் கணிசமான முஸ்லிம் வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. இத்தனை சவால்களுக்கு மத்தியில் 5 வீத வாக்குகளை பெறுவது எந்த விதத்திலும் சாத்தியமில்லை. முடியுமானால் பிரபல்யம் வாய்ந்த வேட்பாளர்கள் யார் யார் எத்தனை வாக்குகளில் எதிர்பார்க்கலாம் என்பதை யாராவது தெரியப்படுத்தலாம்.

எனவே எமது வாக்குகளை வீணடித்து விட்டு பின்பு கவலைப்படுவதை விட சிந்தித்து செயற்படுவோம் ஆனால் எமது பிரதிநிதித்துவத்தை காப்பாற்றலாம். என்னைப் பொறுத்தவரையில் அக்குறணை பிரதேச சபை தலைவர் தலைமையிலான குழு சற்று அவசரப்பட்டு விட்டது என்று தான் கூற வேண்டும் தலைவர் அவர்கள் திறமையானவர் நல்லவர். 

அதில் எந்தவித முரணான கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த எந்த ஒரு தேர்தலிலும் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவான சரித்திரம் இல்லை. இன்றைய தேவை ஆளும் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம். அதனை உறுதி செய்யாது எந்தவித வாதங்களை முன்வைத்தாலும் அது சமூகத்தை மீண்டும் பிழையான வழிநடாத்தலுக்கு உட்படுத்துவதாகும் என்பதில் ஐயமில்லை.

1 comment:

  1. ஆளும் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதி? 😜 😜 😜 😜 கட்டுரையாளர் ஒரு mottukkarar...

    ReplyDelete

Powered by Blogger.