Header Ads



வாக்காளர்கள் குதிரைகளை தெரிவுசெய்து, கழுதைகளை அவற்றின் வீடுகளுக்கு அனுப்பவேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் நாடாளுமன்றத்துக்கு தகுதியில்லாத சிலர் வேட்பாளர்களாக உள்ளனர் என்று அந்தக்கட்சியின் பெண் வேட்பாளரான ஒஷாடி ஹேவமத்தும குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் புத்திசாலித்தனமாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காது போனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்த அதே பிரச்சனையை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவும் சந்திப்பார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே குறித்த பிரச்சனையை மைத்திரிபால சிறிசேனவினாலும், ரணில் விக்கிரமசிங்கவினாலும் தீர்க்கமுடியாமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இந்தநிலையில் பொதுஜன முன்னணி தமது வேட்பாளர் பட்டியல்களில் கழுதைகளையும், குதிரைகளையும் இணைந்துள்ளது.

இதன்போது வாக்காளர்கள் குதிரைகளை தெரிவுசெய்து கழுதைகளை அவற்றின் வீடுகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் ஓஷாடி கோரியுள்ளார்.

அத்துடன் முடிவுகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மையை வாக்காளர்கள் வழங்கவேண்டும் என்றும் ஓஷாடி ஹேவமத்தும தமது பேஸ்புக் பதிவில் குற்றம் சுமத்தியுள்ளார்.

2 comments:

  1. சரியான பதிவுதான். இரு முஸ்லிம் தலைவர்களின் நிலையையும் இது பிரதிபலிக்கிறது.

    ReplyDelete
  2. Oasha de Maththuma அவரகளுக்கு நாம் முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரகளுல் நான்கு ஐந்து கழுதைகள் பாராளுமன்றத்திற்குள் சென்றால் பரவாயில்லை. அங்குள்ள குதிரைகள் ஏதோ அவரகளுக்கு தீனி போட்டு அவரகளது வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் முஸ்லிம் தரப்பில் ஊர் பேர் தெரியாத சுமார் எட்டுக் கழுதைகளை பொதுப் பெரமுன இத் தேர்தலில் சகட்டுக்காக வேட்பாளர்களாக பெயர் குறிப்பிட்டுள்ளது. இது பொதுப் பெரமுன முஸ்லிம் பொது மக்களுககு செய்துள்ள பெரும் துரோகமாகுமும் அவமானமுமாகும். சுயமாகச் சிந்தித்து வேட்பாளர்களை தெரிவு செய்திருக்க வேண்டிய ஜனாதிபதி அவரகளும் பிரதமரும் கேட்பார் புத்தி கேட்டே இந்த அநியாயத்தைச் செய்துளளனர் என்று எண்ணத் தோன்றுகின்றது.
    Oasha de Maththuma, First of all, we would like to thank her. It doesn't matter if four or five donkeys go into parliament for the majority race. The horses there will feed them something, and take care of their work. But on the Muslim side, about eight donkeys, who are not known to the Muslim community, have been publicly named as candidates for the election. This is great treachery and humiliation for the general public. It would seem that the President and the Prime Minister, who should have thought of themselves as self-appointed candidates, would have done this injustice wisely.

    ReplyDelete

Powered by Blogger.