Header Ads



எம் சமூகத்துக்காகவும், எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும் துஆ செய்வோம்

நாம் அவதானித்த வகையில் இந்த தேர்தல் சம்பந்தமாக எமது சமூகம் சரியான வழிகாட்டலைப் பெறவில்லை என்றுதான் கூற வேண்டும், ஏனெனில் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதான கட்சிகள் முன்னனி தமி;ழ் கட்சிகளுடன் பொதுத் தேர்தலி;ல் ஈடுபட்டுள்ளதைப் பார்க்க முடியும். அத்துடன் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் இந்த தேர்தல் சம்பந்தமாக மிகவும் அழகான முறையிலே தெளிவூட்டப்பட்டுள்ளனர் என்று கூறலாம். பெறும்பாலும் அந்தப் பகுதி முஸ்லிம்கள் அவர்களது வாக்குகளை சரியான முறையில் எமது சமூகத்தின் நலன் கருதி பாவிப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எமது தென் மாகான முஸ்லிம்களுக்கு இந்தத் தேர்தல் பற்றிய தெளிவு இன்னும் கொடுக்கப்படவில்லை .  நேற்று கொழும்பு நகரில் முஸ்லிம்களைப் போன்று அபாயா அனிந்து சில ஆண்களோ பெண்களோ(அன்னிய) அபாயா, காஸி முறைமைக்கு எதிராக கோசமிட்டனர், இது சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கும் செயலாகும். இது ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து செயல்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. 

உண்மையாக எமது சமூகம் ஒரு அச்ச உணர்வால் இருப்பதைக் பார்க்க முடியும், எவரைக் கேட்டாலும் என்ன வாகுமோ, என்ன நடக்குமோ தேர்தலின் பின்பு எப்படியான ஒரு சூழல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இருப்பதை அவதானிக்கின்றோம். வல்ல அல்லாஹ்வின் மீது தான் நாம் நம்பி;க்கை வைக்க வேண்டும். இங்கு எந்த அரசியட் கட்சிக்கு வாக்கு இடவேண்டும் என்று நான் கூற வரவில்லை, ஆனால் முஸ்லிம்கள் இந்த புனித அரபா தினத்திலே மற்றும் புனிதமான துல் ஹஜ் மாதத்தின் பத்து நாட்களிலும் வல்ல அல்லாஹ்விடம் கையேந்தி எம் சமூகத்துக்கு மட்டுமல்ல எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்காக வேண்டியும், எமது தாய் நாட்டின் சுபீட்சத்துக்காக வேண்டியும் பிரார்த்தனை புரிவது எமது கடமை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

அன்புள்ளம் கொண்டவர்களே, 

ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதும், அதனை பரித்து எடுப்பதும் ஏக வல்லவன் அல்லாஹ்தான் என்பது எமது அசைக்க முடியாத இறை நம்பிக்கை, இதனை அல் குர்ஆன் திருமறை அத்தியாயம் 26 த்தில் காணலாம். 

(நபியே) நீர் கூறுவீராக 'அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்பிகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகின்றாய், நீ நாடியோரை கண்ணியப்படுத்துகின்றாய், நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய், நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. ஆனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்'

எனவே, இன்ஷாஅல்லாஹ் அந்த ஏக வல்லவனை நாம் கேட்போம். குறிப்பாக இரவு நடு நிசித் தொழுகையில் அந்த ஏகனோடு நாம் மன்ராடுவோம்.

யா அல்லாஹ் எமது துஆக்களையும் எமது வேண்டுதல்களையும் அங்கீகரித்த எமக்கு அருள் புரிவாயாக.  ஆமீன்

அஷ் ஷெய்க் முஹம்மத் இக்பால் நளீர் 

2 comments:

  1. அருமையான பதிவு இக்பால் ஹாஜி....மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. ஆமீன், யா ரப்பில் ஆலமீன். 👍

    ReplyDelete

Powered by Blogger.