Header Ads



போஸ்ட் ரீச் பெற்றுக் கொடுப்பதாக கூறி, ஏமாற்றப்படும் இலங்கை அரசியல்வாதிகள்

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை வேட்பாளர்களினால் பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பிரச்சார நடவடிக்கை காரணமாக பாரிய அளவு பணம் வெளிநாட்டுகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் தொடர்பில் விழிப்புணர்வின்றி வேட்பாளர்கள் செயற்படுவதன் காரணமாக இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி செய்வதனை நிறுத்திய தற்போதைய அரசாங்கம் கொரோனா தொற்றினை இல்லாமல் செய்வதற்கு முயற்சித்து வருகின்ற நிலையில் இலங்கை பணத்தை வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமையை தேர்தலில் பின்னர் இலங்கை மக்கள் அனுபவிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வேட்பாளர்களை அவமதிக்கும் சமூக ஊடக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உதாரணமாக வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொழும்பில் விளம்பரம் செய்வதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 17 லட்சமாகும். அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனாகும். அவர்களில் இணைய வசதி கொண்டவர்கள் 60 முதல் 70 வீதமானவர்களாகும். கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனம் 5 மில்லியனுக்கும் அதிகமான போஸ்ட் ரீச் பெற்றுக் கொடுப்பதாக கூறி ஏமாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போஸ் ரீச் பெற பெருமளவு பணம் செலவிடப்படுகின்றது. எனினும் அந்த போஸ்ட்கள் லத்தீன் அமெரிக்காவிற்கே ரீச் ஆகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிலைமை காரணமாக வேட்பாளர்களின் பணமும் நாட்டின் பணமும் வீணடிப்பதாவும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க் தான் மேலும் மேலும் பணக்காரராகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.