Header Ads



முஸ்லிம் அடிப்படைடைவாதம் தீவிரவாதத்தை நோக்கி, செயற்படுகிறதென்ற தகவல் மிக தெளிவாக கிடைத்துள்ளது

(இராஜதுரை ஹஷான்)

அடிப்படைவாதிகளுக்கு தமது  அரசாங்கத்தில் புலனாய்வு  பிரிவினர் ஊடாக  சம்பளம் வழங்கப்பட்டது என்பதை    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.  இவ்விடயம் தொடர்பிலும் உரிய  விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். அடிப்படைவாதிகளுடன்  அரசியல் தரப்பினரும்,   வியாபாரிகளும் அரசியலுக்கு அப்பாற் சென்று தொடர்பு வைத்துள்ளார்கள்  என   முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி  சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார்.

சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக ...

  ஏப்ரல்  21 குண்டுத்தாக்குதல்  தொடர்பில் 2019  செப்டம்பர் மாதம்   முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால்    நியமிக்கப்ட்ட    குழுவில்  நேற்று  சாட்சியமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து  தெரிவிக்கையில்  அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

முஸ்லிம்   அடிப்படைடைவாதம் தீவிரவாதத்தை  நோக்கி  செயற்படுகிறது  என்ற தகவல் மிக தெளிவாக  முற்பட்ட காலங்களில்  பாதுகாப்பு அமைச்சுக்கு   கிடைத்துள்ளது. அதே போன்று    கடந்த வருடம்  ஐந்தாம் மாதம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேராதெனிய ரஜோபவனராம விகாரைக்கு சென்றிருந்த வேளை   கெப்படியாகொட சிறி விமல  தேரருடன் ஆற்றிய உரை தொடர்பிலும்  அங்கு   அவர் ஏற்றுக் கொண்டார். இந்த அடிப்படைவாதிகளுக்கு  அரசாங்கம்  புலனாய்வு  பிரிவினர் ஊடாக  சம்பளம் வழங்கி  இரகசிய  தகவல்களை பெற்றுக் கொண்டதாக.

அவ்வாறாயின்  அந்த அடிப்படைவாதி  தரப்பினர் யார்,   எந்த நபர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொண்டார்கள்,   இவர்களிடமிருந்து தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையா,  அவ்வாறு இல்லாவிடின் அவர்கள்  குண்டுத்தாக்குதலுக்கு சம்பந்தமில்லையா,   உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விசேட விசாரணை நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட வேண்டும்.  என்று கேட்டுக்   கொள்கிறேன்.

  அத்துடன்  ராஜபக்ஷர்களின் காலத்தில்  ஹவன்காட் நிறுவனம்  வெளிநாட்டு  கடல் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆயுத பயிற்சி  இலங்கையில் வழங்கப்பட்டதாகவும் எமக்கு  தகவல் கிடைத்தன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு     பயிற்சி வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அடிப்படைவாத தீவிரவாதிகளுடன்  அரசியல் தரப்பினரும், வியாபாரா தரப்பினரும்,   குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற் சென்று தொடர்புக் கொண்டுள்ளார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து உண்மைகளையும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்த  வேண்டும்.

 ஹல் - ஜிஹாட் - ஹல்   கய்தா என்ற  எனது  படைப்பாக்கம் 2003ம் ஆண்டு வெளியானது.  அதில்   ஒலுவில் பிரதேசத்தில்   ஒரு தடவை இடம் பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில்    ஒரு சில முஸ்லிம்கள்   தென்கிழக்கு  வலயத்தை தனி இராச்சியமாக  மாற்றியமைப்பதற்கு  கவனம் செலுத்தியுள்ளார்கள்.   என்பது  குறித்தும் புத்தகத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.   நான்  பாதுகாப்பு   சபையின் உறுப்பினர் கிடையாது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பில் ராஜபக்ஷர்களின்  காலத்தில் இருந்து  குறிப்பிட வேண்டும். என்றார்

6 comments:

  1. கால் கை தலையில்லாத முண்டத்துக்கு உயிர் கொடுத்து தேர்தலின் பெயரில் உயிர் கொடுக்க இவர் முயற்சிக்கின்றாரா என எண்ணத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. இவனுடைய அரசியாக ராஜபக்ச குடும்பத்தால் முடிவிற்கு கொண்டுவரப்படும். அது ஒன்று மட்டுமே இந்த இனவாத அரசாங்கத்தில் முஸ்லும்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரூ நன்மையாக இருக்கும்

    ReplyDelete
  3. இவனுடைய அரசியல் ராஜபக்ச குடும்பத்தால் முடிவிற்கு கொண்டுவரப்படும். அது ஒன்று மட்டுமே இந்த இனவாத அரசாங்கத்தில் முஸ்லும்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரூ நன்மையாக இருக்கும்

    ReplyDelete
  4. MUSLIMGALUKKU ETHIRAAKA,MUTHANMUTHALIL, THUVESHATHAI AARAMBITHAVAN IVAN.
    IPPOLUTHUKOODA MADRASAAKKALAI OLIKKAVENDUM, MUSLIMGALUKKENRU THANICHATTAM THEVAI ILLAI,
    IVAIKAL IRANDAIUM, GOTABAYA RAJAPAKSA
    SHEITHAAL, ARSHUKKU MULU AATHARAVAIYUM
    KODUPPOM ENRU KOORUKIRAAN.
    RISHAD, HAKEEM, SAJITH IVANUDANTHAAN ONRU SHERNDU AATCHI AMAIKKA VARAM VENDUMAAM.
    MUSLIMGALEY ENGEY POKIREERKAL.
    KI

    ReplyDelete
  5. when some one says the truth our muslims can not tolerate it. this is what exactly happened when some guys said that one team in Mawanella and Kanthankudy are trying to destroy the country and put the muslims on trouble. we were blame the person who revealed the truth. still we are doing the same. we should come out from this kind of foolish thinking and attitude and we should do research about his statement instead of blaming the person.

    ReplyDelete
  6. ஒருவர் ஒரு கூற்றைக் கூறினால் அவர யார் என்று முதலில் கவனியுங்கள். அப்போது அந்தக் கூற்றின் உண்மைத்தன்மை மிகத் தெளிவாகத் தெரியும். தற்காலத்தில் பயங்கரமான கருத்தைக் கூறுபவரகளைத்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றார்கள் என்று பல முட்டாள்கள் நினைக்கின்றார்கள்.
    If someone makes a claim, consider who he is. The veracity of that claim is very clear. Many idiots think that people just want horrible comments.

    ReplyDelete

Powered by Blogger.