Header Ads



தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகள் ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளனர் - சுமணரத்தன தோர்

தேர்தல் பிரச்சாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று சேர்க்க முடியுமாக இருந்தால்; ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை  தடைசெய்ய வேண்டும். எனவே  ஜனாதிபதி, பிரதமர், சுகாதர அமைச்சு, அனைவருடமும் பெறுப்புடன் கேட்டுக் கொள்வதோடு  இந்த பயணத்தை நிறுத்தினால் இனிவரும் இரு தினங்களில் என்ன நடக்கும் என கூறமுடியாது என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரதிபதியும் சுயேச்சைக் குழு 22 வேட்பாளராக போட்டியிடும் அம்பிட்டிய  தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரரையில் இன்று சனிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார் 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழு 22 மேளச் சின்னத்தில் 1ம் இலக்கத்தின் கீழ் போட்டியிடுகின்றேன். நான் இம்முறைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு போட்டியிட வேண்டியிருப்பது நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்ட ஏற்றுக் கொண்ட பல அரசியல் கட்சிகளுடனும் சுயேட்சைக் குழுக்களுடனும்.. அரசியல் தொடர்பாக என்னிடம் குறைந்த அனுபவம் இருந்த போதிலும், துன்பத்திற்குள்ளாகி இருக்கும் அப்பாவி மக்களுடைய வேதனை எனும் அனுபவம் அளப்பரியதாகும்.

இந்த தேர்தல் காலத்தினுள் என்னால் அவதானிக்கப்பட்ட விடயமாவது என்றும் போல் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு பாராளுமன்றத்திற்கு அனுப்ப முயற்சி எடுக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகள் உங்களை ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தினுள் குடிக்க தண்ணீரின்றி 58,000ம் மக்களும், தலைக்கு மேல் கூரையின்றி வாழுகின்ற பல இலட்சம் குடும்பங்களும் இன்று வரை இந்த மாவட்டத்தினுள் வாழ்வதன் மூலம் அவர்களுக்கான எவ்விதமான சமூக வசதிகளும்; வழங்கப்படவில்லை என்பது தெளிவாகப் புலனாகிறது. இம்முறை அவர்கள் தங்களது நோக்கத்தை அடைவதற்கு முயற்சி எடுப்பது இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை சமூகமயப்படுத்துவதன் மூலமாகும்.

சட்டத்தை ஒரு நீதிபதியாக அமுல்படுத்தியவர் நாட்டின் சட்டத்தை நன்கு அறிந்தவருமாவார் சி.வி.விக்ணேஸ்வரன் ஒரு நேரம்  ஜனநாயத்தை விரும்புகின்றார் ஒரு நேரம் ஈழத்தை விரும்புகின்றார்.  மக்களை வேவ்வேறா இழுத்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர் இந்த மாதிரி செய்வதால் அப்பாவி மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாது.

மட்டக்களப்பு வாக்காளர்களது மனதில் அவ்விதமாக இனவாதத்தை உட்புகுத்தும் விதமாக செயற்படுத்தப்படும் அரசியல் உண்மையிலேயே வஞ்சகமான அரசியல் என்பதனை புத்திஜீவிகளான நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும் அல்லவா? இதுவரை எனக்கு என்னுடைய வெற்றி பற்றி எவ்விதமான சந்தேகங்களுமில்லை. அன்றாடம் என்னைச் சுற்றிச் சேரும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு என்னால் நாளைய தினம் முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

ஏனக்கு நாட்டையே பிரதேசத்தையே பிடிக்கவேண்டும் என்ற அவசியமில்லை ஆயிரம் விகாரைகளை அமைக்கப் போவதாக பொய்பிரச்சாரம் செய்கின்றனர் ஏனெனில் விகாரைகளை பராமரிப்பதற்கான தேரர்கள் இங்கு இல்லை  தொல்பொருள் இடங்களை பாதுகாக்கின்றேம் ஏனெனில் அதற்கு மேல் யாராவது வந்து அமர்ந்து கொண்டிருப்பார்களானால் அது  விகாரை , கோவில், பள்ளிவாசல் என்ற வித்தியாசமில்லை யாராக இருந்தாலும் சட்டம் சரியாக செயற்படுத்தப்பட வேண்டும். அதுமாதி எங்களுடைய பாரம்பரிய மத கலாச்சார விழுமியங்களை விடுத்து வேறுவேறு மதங்களுக்கு முந்தியடித்துக் கொண்டு செல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

இந்து மக்களுடைய பாரிம்பரிய மத நம்பிக்கைகளை அடிப்படைய கொண்டு பல வருடங்களாக தங்களுடைய சொத்துக்களை விடுத்து இறைவன் மீது உள்ள பற்றின் காரணமாக பல கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று கடவுளை தலைகுனிந்து வணங்கும் இனம் இன்று வீதி தடைசெய்யப்பட்டுள்ளது எனவே நான் கூறுகின்றேன் எமது நாட்டின் ஜனாதிபதி பிரதமர் பாதுகர்பு செயலாளர் சுகாதர அமைச்சர் அனைவருடமும் பெறுப்புடன் கேட்டுக் கொள்கின்றேன் இந்த மத அனுஷ்டானங்களை ஈடுபட அனுமதி வழங்கவில்லையாயின் அதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் ஆர்ப்பாட்டம் செய்வோம். 

தேர்தல் பிரச்சாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று சேர்க்க முடியுமாக இருந்தால் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் கூட்டமாக சென்று இரவிலே பார்வையிட முடியுமாக இருந்தால். இந்து மக்கள் தங்களுடைய பாதங்களினால் ஒரு மீற்றர் தூர இடைவெளியில் நடந்து செல்வதுடன் சாப்பிட உணவின்றி தண்ணீரின்றி பெரும் காட்டினூடாக இந்த மத அனுஷ்டானங்களை வணங்கச் செல்லும் அவர்களுடைய பயணங்களை நிறுத்த வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன் இந்த பயணத்தை நிறுத்தினால் இனிவரும்  இரு தினங்களில் என்ன நடக்கும் என கூறமுடியாது. எங்களுக்கும் அடிப்படை உரிமை, கலாச்சார உரிமை உண்டு. 

இவ்வளவு பிச்சனை இருக்கும் பட்சத்தில் இவர் ஏன் யுத்தத்தை ஞாபகப்படுத்துகின்றனர் பொய்யான வாக்கு கொடுத்து திரிவுபடுத்துகின்றனர் யாருடைய பணத்தை இவ்வாறு செலவு செய்கின்றனர் வெறுமனவே விளையாட வேண்டாம் உண்மையில் அப்பாவி மக்களுக்கு வேலை செய்ய முடியுமானவர்கள் இருந்தால் என்னுடன் வந்து உங்கள் வேலைத்திட்டங்களை கலந்துரையாடுங்கள் இல்லையேல் நான் இந்த மக்களுக்கா வெற்றி பெற்று என்னுடைய வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது திண்ணமாகும் என்றார்.  

No comments

Powered by Blogger.