Header Ads



பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கும் ‘மரணத் தண்டனை வழங்க வேண்டும்’

போதைப் பொருள் வர்த்தக​ர்களுக்கு எதிராக மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்படுமாயின், பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (12) அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போ​தே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணத் தண்டனை வழங்கினால் பரவாயில்லை. நாட்டின் எதிர்காலத்தை  அழிக்கும் போதை வர்த்தகர்களைக் கைதுசெய்யவே பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நியமிக்கப்பட்டனரே தவிர, போதை வர்த்தகத்தை முன்னெடுக்க அல்ல என்றார்.

1 comment:

  1. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:42)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.