Header Ads



ஐ.தே.க வெறும் பொம்மையாகிவிடும், எதிரிகள் நண்பர்களான பின் சட்ட நடவடிக்கை பின்னடிப்பு

எதிரிகள் நண்பர்களான பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்கும் முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி மஹியாவையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற  ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட கோப்குழு உறுப்பினர்கள் சிலருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. கோப் குழு உறுப்பினராக தான் ஒருபோதும் இவற்றுக்கு அஞ்சவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமையில் கட்சி தலைமை நடந்து கொண்ட விதம் குறித்து வேதனைப்படுவதாக கூறிய அவர், எதிரிகள் நண்பர்களானால் குற்றத்திலிருந்து தப்பும் முறை மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொள்ளாது இராஜதந்திர மட்டத்தில் தீர்த்துக் கொள்வது முக்கியமானது. சர்வதேச உடன்படிக்கைகளை நாட்டுக்கு சாதகமான வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருபோதுமில்லாதவாறு ஐ.தே.க உடைந்துள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி எழுச்சி பெறும். ஐ.தே.க வெறும் பொம்மையாகிவிடும். பல கட்சிகள் இணைந்து ஐ.தே.கவிற்கு ஆட்சியை பெற்றுக்கொடுத்தாலும் அதனை தக்கவைக்க தலைமைத்துவத்திற்கு முடியவில்லை என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார். 

No comments

Powered by Blogger.