July 14, 2020

முஸ்லிம்களிடம் புரியாணி கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது - அதேபோல் தமிழ் மக்களிடம் பொன்னாடைகள் கிடைக்கும். ஆனால் வாக்குகள் கிடைக்காது

எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கொழும்பில் தமிழர்கள், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிகட் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகிறார். இவருக்கு அரசியல் புத்தி மட்டு என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும் என்பதால், இவருக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. முரளிதரனுடன் கிரிக்கட் அணியில் ஒன்றாய் விளையாடிய சக வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோர் சமீபத்தில் அநியாயமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தபோது முழு நாடுமே அவர்களுக்காக குரல் கொடுத்தது. அவ்வேளையில் தன் நண்பர்களுக்காக வாயை திறக்காத இவர், இப்போது தன் பிழைப்புக்காக அரசியல்வாதி விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். இதிலிருந்தே இவர் யார் என்பது ஊர்ஜிதமாயுள்ளது.

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடமும், என்னிடமும் தமிழ் சமூகங்களை ஒப்படைக்க முடியாது எனக்கூறும் விமல் வீரவன்சவிடம், தமிழர்களுக்கான என்ன மாற்றுத்தீர்வுத்திட்டம் இருக்கிறது என்பதை கேட்டு சொல்ல வேண்டும். அதற்கு பிறகு அவருக்காக இவர் வாக்கு கோரலாம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ், முஸ்லிம் வாக்குகள் வேண்டாம் என்று சொன்னவர் இந்த விமல் வீரவன்ச. கொழும்பு மாவட்டத்தில் இவர்களது கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழ், முஸ்லிம் வேட்பாளரும் இல்லை. இதுதான் உண்மை. இந்நிலையில் இவர் எதற்காக இன்று தமிழ் வாக்குகளை கோருகிறார்?

சஜித் பிரேமதாசவை விட, கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற இவர் துடியாய் துடிப்பது எனக்கு தெரியும். இந்த ஒரே நோக்கத்திற்காகத்தான், தமிழர்களின் மீது திடீர் பாசம் விமல் வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய இவர் முயல்கிறார். இதற்குத்தான் முரளிதரன் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார்.

கொழும்பில் எம்பியாக தெரிவு செய்யப்படும் நான், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையிலும் வாழும் தமிழருக்காக ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் இருப்புக்கு காவல்காரனாக நான் ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் என் பணி, தலைநகரில் மாகாணசபை மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என்று ஒரு தமிழ் தலைமை வலையமைப்பையே உருவாக்கியுள்ள என் பணி, இங்கு வாழும் தமிழர்களுக்கு தெரியும்.

இது தனக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு முரளிதரன் விமல் வீரவன்சவுக்கு எடுத்து கூற வேண்டும். அதைவிடுத்து இங்கே வந்து இடைத்தரகர் வேலை செய்ய முயலக்கூடாது. தனது தொழில் வியாபாரம் வேறு, எமது இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை இவர் உணர வேண்டும்.

முஸ்லிம் மக்களிடம் புரியாணி கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. அதேபோல் தமிழ் மக்களிடம் பொன்னாடைகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. இதையும் முரளிதரன் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

7 கருத்துரைகள்:

Ball pottathum avarum periya aal enda nenappu saami.... Tamilano muslimo inthaa naattil illai ellaame singhala mayam endu sollum pokkirukki poi neenga velakkam solreenga.....
Than balling experince a vera Yaarukkum solli kuduttu training kudukraana ivan... Kaasukku maaradikkum ....... oru eenappayal

Yes you are right. Murali is not a gentleman like Sanga and Mahela.

dont vot following party
podjana parmuna
unp
slfp
these thugs have demolished economy, anology, creating terrorism (fake muslim terrorism,), capure rule

கணேஷா, நீ ஒரு முதல்தர நயவஞ்சகன்! முஸ்லீம் விரோதி!
ஏற்கனவே மஹிந்த சொன்னதை நீ திரும்ப ஞாபகமூட்டி நெருப்பு வைக்கிறாய்!

அதனை விளங்காத சில மாங்காமடையன்கள் உன்னை புகழ்கிறார்கள்!

முக்கியமான பேச்சு. உங்கள் குரல் நாடாளுமன்றில் ஒலிக்கவேண்டும்.

மாமனிதர் அஷ்ரப் அவரகளின் காலத்திலிருந்துதான் முஸ்லிம் அரசியல் வரலாறு எழுதபபடவேண்டியது. ஆயினும் அவரகளது இறப்பிற்குப் பினவந்த முஸ்லிம் அரசியலாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முஸ்லிம் சமூகத்திற்கு சிறப்பாக எதுவும் செய்து விடவில்லை. பேரம் பேசுவதிலும் பணநோட்டுகளை எண்ணுவதிலுமே அவரகளது காலம் கடத்தப்பட்டுவிட்டது. முஸ்லிம் அரசியல் வளராமைக்கு இன்னுமோர் காரணமும் உண்டு. அதுதான் எங்களுடைய சகோதர சமூகங்களின் தலைமைகளோடு பின்னிச் செயற்படாமல் விட்டமையாகும். முஸ்லிம தலைவரகள் அரசியலில் பலசாலிகள் அல்லர். மற்ற சமூகங்களில் உதாரணமாக தமிழ் தலைமைகளுல் விளக்கம் உள்ள தலைவரகள் பலர் இருக்கின்றனர். ஆனால் அவரகளுடன் சுமுகமான அரசியல் தொடர்பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சம்பநதர் ஐயா, மனோ கணேசன் அண்ணண், சுமந்திரன் ஐயா போன்றவரகளின் முஸ்லிம்கள்பற்றி எங்கோ தூரத்தில் இருந்து நலவாகப் பேசும் குரல் எமக்குக் கேட்கின்றது. We must use of them. ஆனால் அவரகளுடைய குரல் இன்னமும் பலமானதாக இல்லை. காரணம் முஸ்லிம்களாகிய நாம் அவரகளுடன் ஒட்டுறவாக ஒற்றுமையாக வாழ்வதற்கு விருப்பப்படாமைதான். அதிமுக்கியமாக எமது தமிழ் சகோதரர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களில் நாமும் சேர்ந்து குரல் கொடுக்க முயற்சிக்க வேண்டும். தமிழர் பிரதேசங்களில் தமிழர்களுடைய உரிமைகளில் முஸ்லிம்களாகிய நாம் ஊடுறுவக்கூ;டாது. அதேபோல் இன்னொரு இனமும் அங்கு தேவையற்று நுழைந்து கருங்காலிகளின் உதவிகளைப் பெறவும் நாம் அனுமதிக்கக்கூடாது. மனோ கணேசன் அவரகள் தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் மிக முக்கியமானவர். தமிழ்த் தலைவரகள் பலர் மிக அண்மைக்காலங்களில்கூட முஸ்லிம்களுக்காக பலதடவைகளில் குரல் கொடுத்துள்ளமையை நாம் பார்க்கின்றோம். முஸ்லிம்களாகிய எங்களுக்கு விமல் வீரவங்சவை விட மனோ கணேசன் அவரகள் மிகவும் முக்கியமானவராகும். எனவே அவரகளுக்கு நாம் வாக்குப் போடாவிட்டாலும் அவரகளுடன் பக்கபலமாக நிற்க வேண்டியது எம்முடைய கடமையாகும்.

Post a comment