Header Ads



மக்களின் கரங்களில் பணம் இல்லை, வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன - சஜித்


ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியைடைந்துள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அரசாங்கம் குறித்த 6.9 மில்லியன் மக்களின் நம்பிக்கையை இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சிதறடித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கரங்களில் பணம் இல்லை- வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன,பொதுமக்களின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய நடுத்தர தொழில்துறை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் சுமைகளை சந்தித்துள்ளதுடன் பலவீனமடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் போதியளவு நிதி இல்லாததன் காரணமாக மக்கள் மீது சுமைகள் செலுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.