Header Ads



நாடாளுமன்றம் திருடர்களின் கூடாரமாக மாறிவிட்டது, நேர்மையானவர்களை தெரிவுசெய்ய ஜேவிபி மக்கள் வாக்களிக்கவேண்டும்

பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகாத தூய்மையான நாடாளுமன்றத்தை தெரிவு செய்யுமாறு ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மொரட்டுவையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றம் குறித்த மக்களின் விமர்சனத்திற்கு மூன்று காரணங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கொள்கைகளிற்கு மதிப்பில்லாததும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக விசுவாசமானவர்களாக இல்லாததும் விமர்சனங்களுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் குறித்த விடயங்கள் பற்றிய அக்கறையுள்ள குழுவொன்று நாடாளுமன்றத்திற்கு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றம் திருடர்களின் கூடாரமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் நேர்மையான வலுவான நாடாளுமன்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் ஜேவிபி கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த முறையாவது மக்கள் சரியையும் பிழையையும் உணர்ந்து சரியான தீர்மானம் எடுத்து வாக்களிக்கச் செல்வார்களா?

    ReplyDelete

Powered by Blogger.