July 20, 2020

முஸ்லிம்கள் இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்களித்து, அவர்களுடைய பங்காளிகளாக நடந்து கொள்ள வேண்டும்

முஸ்லிம்களை வேறுபக்கம் திசை திருப்பும் அரசியல் தலைமைகளுக்கு ஏமாந்து போகாமல், அரசாங்கத்துக்கு வாக்களித்து பாரிஸ் ஹாஜியாரையும் அமோக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறச்செய்யுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத் தேசிய தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நிகழ்வுகள் (19) ஞயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தெல்தோட்டை, கண்டி, மடவளை பஸார், அக்குறணை, கல்ஹின்ன, கலகெதர, ஹதரலியத்த ஆகிய இடங்களில் இடம்பெற்றன. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள், வர்த்தகர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கண்டி வாழ் முஸ்லிம்கள் சமய, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதற்கும் பாரிஸ் ஹாஜியாருடைய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்களுடைய பிரதேசத்தில் ஆளும் தரப்பின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, சுகாதார நடை முறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளிகளைப் பேணி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, எமது ஜனாதிபதி சிறந்த முறையைக் கையாண்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும். தற்போது ஓரிரு நாட்களில் தான் கொரோனா அதிகரித்துள்ளது என்ற செய்தியை நாங்கள் பார்த்தோம். ஆனால், அடுத்த நாடுகளான இந்தியாவில் மில்லியன் கணக்கில் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் சமூக மட்டத்தில் கொரோனா இல்லை. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களினால் தான் கொரோனாத் தொற்று பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்டது  என்பதே உண்மை.

முதலாவது கொரோனாத் தொற்றுக்குள்ளான  இருநூறு பேர் அடையாளம் காணும் போது, அதில் நூறு பேர் அளவில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதனால், அட்டுலுகம, பேருவளை, அக்குறணை,  நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், நாத்தாண்டிய, வாழைத்தோட்டம், மருதானை போன்ற முஸ்லிம் மக்கள் வாழும் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டன.

அந்த மக்களை சுய தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி எந்தக் குறைபாடுகளுமின்றி நன்கு கவனித்து, தமது வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். எமது நாட்டுக்குச் சிறந்த தலைவர் கிடைத்தமையால் தான், இந்தக் கொரோனாத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலுமாக இருந்தது. எல்லா மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில், சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக்கிணங்க ஒரு பொதுவான நியதியுடன் இச்சேவையை முன்னெடுத்தார்கள். முஸ்லிம்களுக்கு எந்தவொரு குறையுமில்லாமல் செய்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என அவர்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் எவ்வித  வேறுபாடுகளுமின்றி சமநிலையில் கவனித்தார்கள். அரசாங்கம் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பாராமல், தனது கடமையைச் சரியாகச் செய்கின்றது. எனவே, முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக வாக்களிப்பதற்கான எந்தவிதமான நியாயங்களையும் சொல்வதற்கில்லை. முஸ்லிம்களும் இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்களித்து அவர்களுடைய பங்காளிகளாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

 ( ஐ.ஏ. காதிர் கான் )

11 கருத்துரைகள்:

Mr Sabry, pls go and fly a kite....

இவன் மீண்டும் தொடங்கி விட்டான் இவன் பாராளுமன்றம் செல்வதற்காக முஸ்லிம்கள் விற்கப்படுகின்றார்கள்

அல்லாஹ்வுக்கு எதிரான, சாம்பலாகத் தயாரானோர் கூட்டம் இது!

இந்த நாட்டில் வாழும் சுமார் பத்து இலட்சம் முஸ்லிம்களின் மூளைகளையும் சலவை செய்து புதிய ஞானத்தைக் கரைத்து ஊற்றும் கன்ரக்ட்டை சட்டத்தரணி அலிசப்ரி பொறுப்பெடுத்திருக்கின்றாரா?

no need partner, we want our own legs, no need begs

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்க மாட்டோமென உத்தரவாதம் எடுத்துத் தாருங்கள்.அப்போது நாம் வாக்களிப்போம்.நீங்கள் பாராளுமன்றம் போவதற்கு நாம் வாக்களிக்க வேண்டுமோ?

எஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம். ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஃபாரிஸ் ஹஜியாராய் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தாங்களாகவே செயல்படத் தொடங்கியுள்ளனர், மேலும் கோதபயாவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டாபயா, மஹிந்த வின் வெற்றியை வெற்றிபெறச் செய்வதற்கான திறனுக்குள் முடிந்த அனைத்தையும் “முஸ்லீம் குரல்” செய்யும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம் வாக்கு வங்கி, முஸ்லீம் சிவில் சமூக தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் உலமா சபாய் தலைவர்களின் துரோகத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்கள் "அதிருப்தி" அடைந்துள்ளனர், அவர்கள் தங்கள் அதிருப்தியைக் காட்டத் தொடங்கியுள்ளனர், மேலும் இந்த ஏமாற்றும், சந்தர்ப்பவாத முஸ்லீம் அரசியல்வாதிகள், முஸ்லீம் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் தலைவர்கள், முஸ்லீம் சிவில் சொசைட்டி தலைவர்கள், சமூகத் தலைவர்கள் , உலேமா சபாய் தலைவர்களுக்கு ஏதிராக பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் நியாயமான "முஸ்லீம் உரிமைகளை" பாதுகாத்து, "தேசிய நல்லிணக்கத்தை" நோக்கி செயல்படுகிராகள்.எஸ்.எல்.எம்.சி, ஏ.சி.எம்.சி மற்றும் என்.யு.ஏ தலைவர்களின் கைக்கூலிகளால் நடத்தப்பட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் ஊடக நாடகங்களால் அவர்கள் ஏமாற்றப்படுவதற்கு இனி தயாராக இல்லை. முஸ்லீம் இளைஞர்களும் சமூகத்தின் இளம் தொழில் வல்லுநர்களும் இந்த மோசடிகளுக்கு சவால் விட “சமூக மீடியாவை” பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆகஸ்ட் 5, 2020 அன்று நடைபெறவிருக்கும் அடுத்த தேர்தல்களில், நிச்சயமாக முஸ்லிம்கள் "கூட்டு எதிர்க்கட்சி" / "எஸ்.எல்.பி.பி அதிகாரத்திற்கு வாக்களிக்க சிந்திக்கிறார்கள். இலங்கையில் ஒரு புதிய முஸ்லீம் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மஹிந்த ராஜபக்ஷவை அவர்கள் ஸ்ரீ லங்காவின் அடுத்த பிரதமராக வாக்களிப்பார்கள், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

எரிப்போருக்கு எண்ணெய் ஊற்ற
நியமிக்கப்பட்டோர்களே இவர்கள்!

18 வயதில் தான் எல்லோருக்கும் வாக்குரிமை கொடுக்கப்படுகிறது. காரணம், அந்த வயதில் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க முடியும் என்பதால். ஆகவே யாரும் யாருக்கும் எப்படி vote பண்ண வேண்டும் என்று tuition எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

If not????? No worry they will give you wht they offered

You are talking about corona but forgot to mention burning of janaza. Please understand that dua of affected people is curse for your government.

Post a comment