July 06, 2020

முஸ்லிம்களுக்காக என்ன சாதித்தீர்கள், என்று தைரியமாகக் கேளுங்கள் - வேட்பாளர் பாரிஸ்

(ஐ.ஏ. காதிர் கான்)

   கண்டி மாவட்ட மக்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் மகத்தான வெற்றி ஒன்றை ஈட்டி, இந்த மத்திய மலை நாட்டு மண்ணில் புதிய சரித்திரம் ஒன்றை இம்முறை படைப்பதற்கு, கண்டி மக்கள் அணி திரள வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

 அக்குரணையில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.  அவர் அங்கு மேலும் பேசுகையில், 

   மத்திய மாகாண கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு இம்முறை கிடைத்துள்ளது. பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் முதல் முஸ்லிம் உறுப்பினர் எனும் மகுடத்தை, நான் பெறுவதற்குக் காரணமாக இருக்கும் கண்டி மாவட்ட மக்களாகிய நீங்கள் பெறப்போகும் அதிஷ்டமாக நான் எனது இந்த வெற்றியைக் கருதுகின்றேன்.     

எனவே, அந்த நம்பிக்கை வீண் போகாதவாறு நீங்கள் அனைவரும் என்னுடன் கைகோர்க்க வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.    நான் கண்டி மாவட்ட மக்களுக்கு பாராளுமன்றம் செல்ல முன்பும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு இருக்கின்றேன். என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இதற்கு மக்களாகிய நீங்களே சாட்சிகளாக இருக்கின்றீர்கள்.

பேசமுடியாத ஊமைகளாக இவ்வளவு காலமாக முடங்கிக் கிடந்த முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்கள் தேர்தல் நெருங்கியவுடன் உரிமைக் கோஷங்களை எழுப்பிக்கொண்டு எமக்கு சுதந்திரம் வாங்கித் தருவதாக உங்களைத் தேடி வருவார்கள். அவர்களிடம் இவ்வளவு காலமாக முஸ்லிம்களுக்காக என்ன சாதித்துக் காட்டினீர்கள் என்று தைரியமாகக் கேளுங்கள். இவ்வாறான ஏமாற்றுக் காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். மிக நிதானமாகச் சிந்தித்து உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள். இதன் மூலம், கண்டி மாவட்ட மக்களின் குறிப்பாக, உடுநுவர தொகுதி வாழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சகல சமூக மக்களுக்கும் தேவையான அனைத்து சமய பொது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வேன் எனவும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

   இன்று நமக்கு ஒரு சிறந்த ஆளுமை மிக்க செயற்திறன் கொண்ட ஜனாதிபதி ஒருவரை மக்கள் தெரிவு செய்துள்ளனர். அவருடைய கரங்களை  மேலும் வலுப்படுத்தி, அவரது வேலைத்திட்டங்களைத் தொடராக முன்னெடுத்துச் செல்லவும், எமது மண்ணையும் மக்களையும் வளப்படுத்தவும் நாம் அவருடன் ஒன்றுபடுவோம் என்றார்.  

4 கருத்துரைகள்:

We need Muslim Boys School in Kandy... Promise us that we will vote you..

We need Muslim Boys School in Kandy... Promise us that we will vote you..

SLPP Candidate A.L.M. Faaris should be unanismously voted to represent Kandy district as a new Muslim MP of the SLPP/Mahinda/Gotabaya new government on August 5th., 2020, Insha Allah.
The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Kandy district too, Insha Allah. Rauf Hakeen has already complained that the Muslims are moving away from the SLMC and this has become a "craze" in the Muslim supported SLMC areas.
The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” and the SLMC have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards “National Reconciliation”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” or the SLMC, ACMC and NUA leaders anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections to be held on August 5th., 2020, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition”/"SLPP to power. THEY WILL VOTE MAHINDA RAJAPAKSA TO BECOME THE NEXT PRIMEMINISTER OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST MAHINDA RAJAPAKSA AND GOTABAYA RAJAPAKSA TO CREATE A NEW MUSLIM POLITICAL CULTURE TOO in Sri Lanka, Insha Allah.
Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

எவரும் எங்களுடைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் அல்லது முன்னால் பாஉ களிடம் "நீங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்" என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். நான்கு அல்லது ஐந்து நபர்களைக் கொண்டதுதான் ஒரு சமூகம். உடனே அவரகள் சொல்வார்கள். "நான் எனது மனைவி எனது வாப்பா உம்மா எனது மனைவியின் வாப்பா உம்மா போன்றவரகளுக்கு பில்லியன் கணக்கான பெறுமதியில் சேவை செய்துள்ளேன் என்று கூறினால் உங்களால் எதுவும் சொல்லஇ செய்ய முடியாமல் போய்விடும். உங்கள் வார்த்தைகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். (எப்படி இந்த ஐயாவின் புத்திமதி - கவனமாக இந்த ஆசாமிகளுக்கிட்ட கேள்விகளைக் கேளுங்க)

Post a comment