Header Ads



உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும், வீராங்கனை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் - தன் முந்தைய வாழ்வின் எடுக்கப்பட்ட, உடல் பாகங்கள் தெரியும்படியான படங்களை பகிர வேண்டாம் என்கிறார்


- Aashiq Ahamed -

லாத்வியா நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனையான ரெபெகா கொஹா (Rebeka Koha), தான் இஸ்லாமை தழுவிவிட்டதாக 27.07.2020 அறிவித்திருக்கிறார். 2016 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடத்தையும், ஜுனியர் உலக சாதனைகளுக்கும் உரிமையாளரான ரெபெக்கா, லாத்வியா அரசின் 'வளர்ந்து வரும் நட்சத்திரம்' விருதையும் பெற்றவராவார்.

"இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணரும் அதே நேரம் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன் என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பதெல்லாம் என் முடிவுக்கான மதிப்பை மட்டுமே. இத்தருணத்தில் நல்லதாக கூற உங்களிடம் ஒன்றும் இல்லையென்றால் தயவுக்கூர்ந்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று எனக்கு சிறப்பான நாள், காரணம், நான் முஸ்லிமாகிவிட்டேன். ஷஹாதாவை முன்மொழிந்து இஸ்லாமில் நுழைந்து விட்டேன். இன்றிலிருந்து என் வாழ்வின் புதிய மற்றும் அழகான அத்தியாயத்தை தொடங்குகிறேன்"

மேலும், தன்னுடைய முந்தைய வாழ்வின் போது எடுக்கப்பட்ட, உடல் பாகங்கள் தெரியும்படியான படங்களையும் யாரும் இனி எங்கேயும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ரெபெக்கா.

இதுக்குறித்த அவருடைய Instagram பதிவை காண https://www.instagram.com/p/CDHijeJJpLH/…

4 comments:

  1. "மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். "
    (அல்குர்ஆன் : 8:63)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. start your true life from now, bismillah...

    ReplyDelete

Powered by Blogger.