Header Ads



சஜித் ஜனாதிபதியாக இருந்திருந்தால், கொரோனாவில் பலர் இறந்திருப்பார்கள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகி இருந்திருந்தால், கொரோனா வைரஸின் முதலாவது அலையிலேயே நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் இறந்து போயிருப்பார்கள். இதனால், கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கடடுப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் நிலைமை இருந்து வரும் சூழ்நிலையில், எதிர்காலத்தில் அது வந்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

Powered by Blogger.