Header Ads



கொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்


தங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு பிரிவு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி விடுமுறை பெற்று கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வருகைத்தந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறைக்கு சென்றுள்ளார்.

மாத்தறை நகரத்திற்கு சென்ற அந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி கதிர்காமம் செல்லும் பேருந்தில், பட்டிபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஜுலை 6 மற்றும் 7ஆம் திகதிகளில் தனது வீட்டில் நேரத்தை செலவிட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுடன் பழகியுள்ளார். இதனால் 9 வீடுகளில் வாழும் நபர்கள் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக அந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை இராணுவ தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ள நிலையில் 9ஆம் திகதி அங்கு அமைந்துள்ள அரச வங்கி ஏடீஎம் இயந்திரம் மூலம் பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அவர் தங்காலை நகரில் பிரபல வர்த்தக நிலையத்திற்கு அவசியமான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் நகரத்தின் கடைகள் சிலவற்றிற்கும் அரச ஒசுசெலவிற்கும் சென்றுள்ளார். பின்னர் இந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் தங்காலை பேருந்து நிலையத்தின் மேல் மாடிக்கு சென்று அங்குள்ள மூடி வெட்டும் சலூனில் முடி வெட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து அன்றைய தினம் நண்பர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிளில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அத்துடன் ஜுலை மாதம் 9ஆம் திகதி மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்று மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர் தங்காலை நகரின் பல இடங்களுக்கு சென்றுள்ளமையினால் அவருடன் பழகியவர்களை தேடிய வருவதாகவும் இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளின்றி நகரத்திற்கு வருவதனை தவிர்க்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் முடிவெட்டுவதற்காக சென்ற சலூன் மற்றும் அங்கிருந்தவர்கள், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜுலை 9ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு பின்னர் அந்த சலூனில் முடி வெட்டிய நபர்கள் இருப்பின் அவர்கள் தங்காலை மாவட்ட சுகாதார அதிகாரி அலுவலகத்தின் 047-2240278 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவித்துமாறு வைத்தியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.