Header Ads



இலங்கைக்கு அவமானத்தை, ஏற்படுத்தும் செயல் - நாமல் கடும் விமர்சனம்

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) எந்த ஆரம்ப விசாரணையும் நடத்தாத நிலையில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களை காவல்துறைக்கு வரவழைப்பது நாட்டிற்கு தேவையற்ற அவமானத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குமார் சங்கக்காரவை நாளையதினம் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் ஆட்டநிர்ணயம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.