Header Ads



உயிருக்கு ஆபத்து இருப்பதால், என்னை வேறு சிறைக்கு மாற்றுங்கள் - கஞ்சிபான இம்ரான் உயர் நீதிமன்றில் மனு

உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னை பூசா சிறைச்சாலையில் இருந்து வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாதாள உலகக்குழு தலைவரான கஞ்சிபான இம்ரான் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பாதாள உலகக்குழுவினர் மற்றும் தான் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா சிறைக்குள் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனால், தனது உயிரை பாதுகாக்க வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணி கே. தனுக லக்மால் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மனுவில், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய, பூசா சிறைச்சாலை அத்தியட்சகர், நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர் உட்பட 9 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கஞ்சிபான இம்ரான் 6 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி என்பதுடன் அவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

No comments

Powered by Blogger.