July 24, 2020

முஸ்லிம்கள் அனைவரும் முழு அளவில், வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தீர்க்கமானதொரு தேர்தலாக அமையப் போகின்றது. தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக ரீதியான உரிமையாகும். ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் இத்தேர்தல் சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். எனவே இதனைக் கருத்திற்கொண்டு முஸ்லிம்கள் அனைவரும் முழு அளவில் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டுகின்றோம் என முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளர் எஸ்.ஏ. அஸ்கர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தற்போது முஸ்லிம்கள் பல பல்முனை பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த பின்னணியில், எமது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஜனநாயக ரீதியில் எமது அபிலாஷைகளை வென்றெடுக்கவும் பாராளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவம் இன்றியமையாததாகும். இப்பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் உத்வேகத்துடனும் சமூக கடமைப்பாட்டுடனும் வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிரோம்.

ஓர் அரசியல் கட்சியை ஆதரிப்பதும் நமக்குத் தேவையான அபேட்சகர்களை ஆதரிப்பதும் அவரவரது தனிப்பட்ட தெரிவாகும். இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் முழு அளவில் இதற்கான  சுதந்திரம் உண்டு.

இந்த சுதந்திரமான தெரிவுச் சுதந்திரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவருக்கும் தலையிட முடியாது. எதிர்வரும் பொதுத்தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் அமைதியாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அரசியலை மையமாகக் கொண்டு வீண் பிரச்சினைகளிலும் சண்டைச்சச்சரவுகளிலும் ஈடுபடாது, சமூக ஒற்றுமையைப் பேணிப்பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும். அதேநேரம் உலமாக்கள் சமூகத்தில் ஆன்மீக வழிகாட்டல்கள் என்ற வகையில் மிகவும் பொறுப்புணர்வோடும், கடமையுணர்வோடும், தூரநோக்கோடும் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்படுவதை தவிர்ந்து கொள்ள வேண்டுமென வினயமாக வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறாக அரசியலில் ஈடுபடுவது சமூகத்திலும் நாட்டிலும் உலமாக்களுக்கு இருக்கும் நன்மதிப்பைக் குறைப்பதோடு, மக்களின் சுதந்திரமான தெரிவுச் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமையும்.

அதேபோல் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இலாபங்களுக்காக உலமாக்களை பகடைக்காய்களாக பாவிப்பதை அரசியல்வாதிகள் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

இத்தகைய நடவடிக்கைகள் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதோடு, உலமாக்களின் நடு நிலையான நிலைப்பாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சின்னாபின்னப்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 கருத்துரைகள்:

A great and timely advise to muslims. Hope they will act wisely.

Ya Allah help us over the enemies of Islam and Muslims..

எவர் எப்படித்தான் கூறினாலும் முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வில் எந்தத் தேர்தலும் அவரகளுக்கு நிம்மதியான வாழ்வினைத் தரப் போவதில்லை. காரணம் இலங்கையின் அரசியலமைப்பு, மக்களின் எண்ணப்பாங்கு, தம் சகோதரர்களை தம்மவரகள் என மதித்து நடக்கும் மனப்பாங்கு இல்லாதவரை இந்நிலைமை தொடர்ந்து கொண்டே போகும். இந்நாட்டு முஸ்லிம்கள் இரண்டு பக்கங்களிலும் தோல் போர்த்தப்பட்ட மேளத்திற்கு ஒப்பானவரகள். 1948 லிருந்து இன்று வரை முஸ்லிம்கள் ஏதோ சிங்களக் கட்சிகளுக்குத்தான் வாக்களித்து வருகின்றார்கள். TB. ஜாயா அவரகளிலிருந்து இன்னு வரை சுமார் 60ற்கும் மேற்பட்ட இலங்கையின் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களிடம் சிங்களக் கட்சிகளுக்கே வாக்களிக்குமாறு எல்லாக் காலங்களிலும் கூறி வந்துள்ளனர். பிற்பட்ட காலத்தில் அரசியலுக்கு வந்த அஸ்ரப், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அதாவுல்லா போன்ற அனைவரும் தனிக்கட்சி வைத்திருந்தாலும் தேர்தல் காலங்களில் சிங்களக் கட்சிகளுக்கே வாக்களிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களை வலியுறுத்தி வந்துள்ளனர். இறுதியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் படுமோசமாகப் பாதிக்கப்படுகின்ற இனமாக முஸ்லிம் சமூகமே இருந்து வந்துள்ளது. முஸ்லிம்கள் பிரிந்து நின்று இரு கட்சிகளுக்கு தொடர்ந்து வாக்களிப்பதனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மறுகட்சி முஸ்லிம்களை மேளமாகப் பாவிக்கும். ஆனால் வாக்குகளைப் போடச் சொல்லும் இரு பக்க முஸ்லிம் தலைவரகளும் மிக ஒய்யாரமாக தமது வாழ்க்கை வசதியினை நவீன முறையில் அனுபவித்துக் கொண்டு செல்வர். அடுத்த தேர்தல் வரும்வரை மக்களின் எண்ணமே அவரகளுக்குக் கிடையாது. வாக்களித்த மக்கள் அரசுத் தொழில் பெறுவதற்கும் சொந்தத் தொழில செய்வதற்கும் பெரும் தடைகள் அன்றும் காணப்பட்டன. இன்றும் காணப்படுகின்றன. இந்நிலைமையில் அது என்றும் காணப்படும். பொதுவான சில வசதிகள் சமூகத்திற்குக் கிடைத்தாலும் அவரகளால் நிம்மதியாக வாழ்வதற்கான வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லை. ஆட்சிக்கு வருகின்ற அரசு எதுவாக இருந்தாலும் பொதுவான சில வசதிகளை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன் அடிப்படையிற்றான் முஸ்லிம்களுக்கும் சில வசதிகள் காலத்திற்கு காலம் செய்து கொடுக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகள் அமைச்சரகளாகி தமது ஊர்களுக்கு மாத்திரம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். முஸ்லிம் ஊர்களாக வேறு பல ஊர்கள் இருந்த போதிலும் அவை புறக்கணிக்கப்பட்டன. காரணம் தன் சொந்த குறுகிய சுயநலனுக்காகத்தான். இவற்றை எல்லாம் கலைந்து காத்திரமான சமூகக் கட்டமைப்பினை உருவாக்குவலதற்கு "The Muslim Council of Sri Lanka" விடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?

No matter what anyone says, no election is going to give Muslims a peaceful life. The reason is that the situation will continue as long as there is no constitution of Sri Lanka, no attitude of the people, no attitude of respecting their brothers as brothers. The Muslims of this country are like trumpets wrapped in leather on both sides. Since 1948, Muslims have been voting for some Sinhala party. Since TB Jaya's era, more than 60 Sri Lankan Muslim leaders have always called on Muslims to vote for Sinhala parties. Ashraf, Hakeem, Hisbullah and Athaullah, all of whom have since entered politics, have been urging Muslim voters to vote for Sinhala parties during elections, even if they have separate parties. The Muslim community has always been the worst victim of any party that comes to power. If Muslims stand apart and continue to vote for two parties, then if one party comes to power, the other party will use the Muslims as a trumpet. But the Muslim leaders on both sides of the aisle will be enjoying the comforts of life in a modern way. They have no idea what the people will think until the next election. There were still major obstacles for the people who voted to get government jobs and start their own businesses. Are still found today. In this case, it is. Although some common facilities are available to the community, they have not been provided with any facilities to live in peace. Whatever government comes to power, it is necessary to provide some common facilities to the people of the country. It is based on the fact that some facilities are provided to Muslims from time to time. Some politicians became ministers and provided facilities only for their towns. Although there were many other towns that were Muslim towns they were neglected. The reason is for his own narrow selfishness. Do the Muslim Council of Sri Lanka have any plans to dismantle all this and create a viable social structure?

Post a comment