Header Ads



தேர்தலின் பின்னர் ஸ்திரமான, அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் சவால்கள்

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 125 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கே.டி.லால் காந்த , தேர்தலின் பின்னர் ஸ்திரமானதொரு அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் சவால்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷக்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் தம்மால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறிக் கொண்டிருந்தனர். தற்போது 125 ஆசனங்களைப் பெறுவோம் என்கின்றனர். ஆனால் 2010 ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்த போது கூட ராஜபக்ஷக்களால் மூன்றில் இரண்டைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் லால் காந்த குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.