July 29, 2020

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருபோதும் கோத்தாபயவுடன் கைகோர்க்க முடியாது - பொதுஜன பெரமுன


(எம்.மனோசித்ரா)

இஸ்லாம் அடிப்படைவாதிகள் மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளை விடுத்து ஏனைய  அனைத்து தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்க்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று புதன்கிழமை -29- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை அரசியலிலிருந்து நீக்குவதற்கான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சரொருவர் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் இது பற்றி பலருடன் பேசியிருக்கின்றார். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடளித்திருக்கின்றோம். இரகசியமானதும் நுட்பமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

பசில் ராஜபக்ஷவை அரசியலிலிருந்து நீக்காமல் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று குறித்த அந்த முன்னாள் அமைச்சர் கூறியிருக்கின்றார். எனவே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவது மாத்திமின்றி பசில் ராஜிபக்ஷவுக்கு விஷேட பாதுகாப்பை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பமுள்ளது. எனினும் சதித்திட்டம் மூலம் பசில் ராஜபக்ஷவை அரசியலிலிருந்து நீக்க முடியாது. அவர் சிரேஷ்ட அரசியல் தலைவர் என்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அரசியலிலிருந்து விலக்க முயற்சிக்கலாம். எனவே தான் விஷேட பாதுகாப்பை கோருகின்றோம்.

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெறுவதை தவிர்க்க முடியாது என்று இதன் போது பேசப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் ராஜபக்ஷக்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பார்கள் என்றும் அதனால் எதிர்க்கட்சியாக தம்மால் உறுதியாக செயற்பட முடியாது என்பது பற்றியும் பேசியுள்ளனர். பசில் ராஜபக்ஷ செயற்படுகின்ற விதம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு பற்றியும் அவதானம் செலுத்தியிருக்கின்றனர். இது மிகவும் பாரதூரமானதாகும்.

பிரதமர் பதவி பற்றி பேசிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச 11 பில்லியன் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. 2608 மில்லியன் வட்டி இல்லாமலாக்கப்பட்டுள்ளது. மத்திய அபிவிருத்தி நிதிக்குழுவே இவற்றை கையாளும். எனினும் அதன் எவ்வித அனுமதியும் இன்றி இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பதவியைப் பெற முயற்சிக்கும் சஜித் பிரேமதாச இவ்வாறு செய்துள்ளமை சிறிய விடயமல்ல. மோசடி செய்யப்பட்டுள்ள 11 பில்லியன் பணம் பல்வேறு விடயங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வட்டி இல்லாமல் போயுள்ளது.

டோலரில் காணப்பட்ட இந்த தொகை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆட்சிக்கு பொறுப்பானவரிடம் அனுமதி பெறாமல் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த பணத்தில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசிக்கு வாக்களிக்கவுள்ளவர்கள் இது பற்றி அவர்களிடம் வினவ வேண்டும்.

கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிச்சயம் கிடைக்கப் பெறும். பெருமளவான ஐ.தே.க. ஆதரவாளர்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள். சிறந்த செயலாற்றக் கூடியவர்களை மக்கள் பாராளுமன்றத்திற்க தெரிவு செய்ய வேண்டும்.

இஸ்லாம் அடிப்படைவாதிகள் மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளை விடுத்து ஏனைய  அனைத்து தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்க்க வேண்டும். இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல. 1977 ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சி காலத்தைப் போன்று 6 இல் 5 பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.

3 கருத்துரைகள்:

BAUTHA ADIPADAI WAATHIHAL THAAN AVARUDAN IRIKIRAARHALE.

WHAT EVER IT IS ALLAH HAS DECIDED EVERYTHING AT ALL.MAY ALLAH BLESS OUR COUNTRY AND OUR UMMAH

இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்று அவற்றைத் தீவிரமாக தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் உண்மையான முஸ்லிம்களோடு இவர்கள் கைகோர்க்கத் தயாரில்லை.  இவர்கள் விரும்புவது பாரம்பரிய முஸ்லிம்கள் - அதாவது பெயரளவில் முஸ்லிம்கள்.

"நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்."
(அல்குர்ஆன் : 2:208)

Post a comment