Header Ads



கொரோனாவிலிருந்து இருந்து மீள இராணுவமும், புலனாய்வுத்துறையுமே காரணம் - அரசாங்கம்


(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் பரவலில் இருந்து இதுவரை காலமாக நாம் பாதுகாப்பாக இருக்கவும் தாக்கங்களை குறைத்துக்கொள்ளவும் எமது இராணுவமும், புலனாய்வுத்துறையும் முக்கிய காரணமாகும். அத்துடன்  வைத்திய அதிகாரிகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும்  காரணமாகும்.

இராணுவத்தை விமர்சிப்பவர்கள் வெறும் அரசியல் நோக்கங்களுக்காக அதனை செய்வதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று -16-  அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சர் ரொமேஷ் பதிரன ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

இது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பதிரன கூறுகையில்,

சகல தரப்பும் இணைந்து பெற்ற வெற்றியே இது, இதில் வைத்திய துறையினர், சுகாதார அதிகாரிகள் மிக முக்கிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளையும், மரியாதையையும் வழங்க வேண்டியது கட்டாயமாகும். அது போன்று பாதுகாப்பு தரப்பினர் இந்த செயற்பாடுகளை இணைக்கும் மற்றும் துரிதப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அவர்களின் பங்களிப்பும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதனை மறுக்க முடியாது என்றார்.

No comments

Powered by Blogger.