Header Ads



மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் - புதிய அரசமைப்பிற்கான மக்களின் ஆணையை கோரினார் மகிந்த

புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான மக்களின் ஆணையை ஸ்ரீலங்கா பொதுஜனமுரன கோரவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொகுவலயில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனது கட்சி கோருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல தடவைகள் அரசமைப்பு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பிரதமர் தனது கட்சி அரசமைப்பு மாற்றங்களை முன்னெடுக்காது மாறாக புதிய அரசமைப்பை உருவாக்க முயலும் என தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது எனினும் நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவு இன்மையால் அது சாத்தியமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஆம் மூன்றில் இரண்டைக் கொடுப்பதன் மூலம் இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியை உறுதிப்படுத்த முடியும்.அதற்காக இன்று சட்டத்தரணி அலிசப்ரி கண்டிக்கு வருகின்றார். அவருக்கும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

    ReplyDelete
  2. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
    (அல்குர்ஆன் : 7:158)

    ReplyDelete

Powered by Blogger.