Header Ads



நான் நேர்மையானவன், இறந்து போனபின்னரும் மக்கள் என்னைப்பற்றி பேசுவார்கள் - மைத்திரி

மொரகஹாகந்த திட்டத்தை உருவாக்கி, பொலன்நறுவையை புரட்டி போட்டு, பிசோபுர என்ற பெரிய குடியேற்றத்திட்டத்தை உருவாக்கி மக்களை குடியேற்றிய தன்னை பற்றி அடுத்த 25 வருடங்களில் தான் இறந்து போன பின்னும் மக்கள் பேசுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் நேர்மையான மனிதன் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கோடிக்கணக்கில் நிதியுதவிகள் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பணத்தை தான் பையில் போட்டுக்கொண்டிருக்கலாம் எனவும் பிள்ளைகளுக்கு வீடுகள், காணிகளை வாங்கி கொடுத்திருக்கலாம் எனவும் தான் அந்த பணத்தை பயன்படுத்தி என்ன செய்தேன் என தேடிப்பார்க்குமாறும் அவர்கூறியுள்ளார்.

தனக்கு கிடைத்த அந்த நிதியுதவியில் அனுராதபுரத்தில் சிறுநீரக வைத்தியசாலையை நிர்மாணித்ததாகவும் அதனை நிர்மாணிக்க அரச பணத்தில் ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. வீட்டில் சும்மா கிடந்தால் உமக்கு நிதியுதவியை யார் தருவார்கள். இலங்கை மக்களின் பெரும்பாலானவர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து சனாதிபதியாக்கிய பொதுமக்கள் செய்த பெரும் தவறின் காரணமாகத்தான் உமக்கு அந்த நிதியுதவி கிடைத்தது. அதில் ஒரு சதமேனும் உமக்குச் சொந்தமில்லை. அந்த பணத்தைச் சரியாக அனைத்தையும் திறைசேரியில் ஒப்படைக்காமல் அதில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டு அதுவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தான அந்தத் தொகையை மண்துவேசம் காரணமாக பொலன்னறுவைக்கு செலவுசெய்திருக்கின்றீர். அது மிகப் பெரிய தவறு. அதுமட்டுமன்றி கிடைத்த தொகை சரியாக எவ்வளவு என ஆவணங்கள் மூலம் நிரூபிக்குமாறு பொதுமக்கள் கேட்டால் உண்மை வௌிவருமா.நிச்சியம் வராது. உண்மை அதுதான்.

    ReplyDelete
  2. Ivana patri kattaayam samooham pesum. But enna pesum?

    ReplyDelete
  3. நம் எல்லோருக்கும் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் என்றோ ஒரு நாள் இறந்துதான் போவோம் என்ற உள்ளுணர்வு இருந்து கொண்டிருக்குமானால் நாட்டு மக்கள் எவ்வித கிலேசமும் இல்லாமல் இருப்பார்களே என்ற எண்ணம் ஏன் வருவதில்லை..

    ReplyDelete
  4. HE IS A VERY CUNNING FELLOW, WORST FELLOW

    ReplyDelete

Powered by Blogger.