July 18, 2020

இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒழிப்பு, இனத்துக்கு முக்கியத்துவம் என்பதே எமது கொள்கை

(இராஜதுரை ஹஷான்)  

புதிய அரசாங்கத்தில்  மூன்றில் இரண்டு  பெரும்பான்மை  ஆதரவை  பெற்றுக் கொள்வதற்காக  மத  அடிப்படைவாதிகளுடன் ஒருபோதும்  கூட்டணியமைத்துக் கொள்ளமாட்டோம். ஜனாதிபதி தேர்தல் காலத்தில்       மக்கள் மத்தியில் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக  செயற்படுத்த  அமைச்சர் விமல் வீரவனசவுடன் இணைந்து தொடர்ந்து   குரல் கொடுப்பேன் என   பிவிதுறு ஹெல உருமய அமைப்பின் தலைவர்  உதய  கம்மன்பில தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை -18- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதம்  ஒழிப்பு, தேசிய  பாதுகாப்பு,  இனத்துக்கு முக்கியத்துவம்,  மற்றும்   அனைத்து இன  மக்களும்   பொதுவான  சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்ற   விடயங்களை  இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எமது கொள்கையாக வெளியிட்டோம். கடந்த அரசாங்கத்தில்  அடிப்படைவாதத்திற்கு அரச   பாதுகாப்பு  வழங்கப்பட்டது. இதனால்  பாரிய விளைவுகள்  ஏற்பட்டன.

இடம் பெற்று முடிந்த   ஜனாதிபதி தேர்தலில்   பெரும்பான்மையின மக்கள்   இவ்விடயங்களை  கருத்திற் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.   இந்த வாக்குறுதிகள் அனைத்தும்   பொதுஜன பெரமுன  தலைமையிலான  புதிய  அரசாங்கத்தில் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியை  மக்கள் தற்போது எழுப்புகிறார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் எமது நாட்டில் புரையோடியுள்ள  .இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை  பகிரங்கப்படுத்தியது.  குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள்  அப்போதைய அரசாங்கத்தினால்  பாதுகாக்கப்பட்டார்கள்.    எமது ஆட்சியில் இவர்கள்  நிச்சயம்  கைது  செய்யபட்டு    நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன   பொதுத்தேர்தலில்   பெரும்பான்மை  ஆசனங்களை கைப்பற்றும் .   ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை  வழங்க வேண்டாம் என  எதிர் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.  புதிய  அரசாங்கத்தில்  மூன்றில் இரண்டு  பெரும்பான்மை ஆசனங்களை   பெற்றுக் கொள்வதற்கான மத கொள்கைகளை  கொண்ட அடிப்படைவாதிகளுடன் ஒருபோதும்  கூட்டணியமைக்க மாட்டோம்.    மூன்றில் இரண்டு ஆசனங்களை நிச்சயம் மக்கள்  எமக்கு வழங்குவார்கள் என்றார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில்   69 இலட்ச மக்களுக்கு       வழங்கிய   வாக்குறுதிகளை   புதிய அரசாங்கத்தில்  உறுதியாக செயற்படுத்த   அமைச்சர் வீரவன்சவுடன் இணைந்து  குரல் கொடுப்பேன்எ என்பதை மக்கள் மத்தியில்  குறிப்பிட்டுக் கொள்கிறோம்.  அடிப்படைவாதிகளின் நிபந்தனைகளுக்கும்  அடிபணிய மாட்டோம் என்றார்.

3 கருத்துரைகள்:

எல்லா மதங்களுக்கும், சன்மார்க்கத்துக்கும் அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. உதாரணமாக முஸ்லிம்களுக்கு புனித அல்குர்ஆன், அல் ஹதீஸ் என்பன போன்றன. 

இது போன்றே, அனைத்து மதங்களுக்கும் உள்ளன.  இவை பகிரங்கமானவை.  அனைத்தும் நல்லவற்றையே போதிக்கின்றன.

எவரொருவர் தத்தம் சமயத்தின் அடிப்படைகளை பேணி அவை கூறும் நற்கருமங்களை புரிகின்றனரோ, அவர்கள் அவ்வச் சமயங்களின் அடிப்படைவாதிகளாகக் கணிக்கப்படுவர். 

தவிரவும், அவ்வச் சமயங்களின் ஒழுக்க சீலர்களாகவும் கணிக்கப்படுவர்.  இவர்களில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மிகவும் குறைந்தவர்களாகவே இருப்பர்.  இவர்கள் மக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையே ஏற்படுத்த முயற்சிப்பர்.

இந்த வகையில், ஒவ்வொரு முஸ்லிமையும் அடிப்படைவாதிகளாகவே வாழ வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது:

"நம்பிக்கை கொண்டவர்களே!  நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;  தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்"
(அல்குர்ஆன் : 2:208)

அவ்வாறு வாழ்வோருக்கு இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் இறைவன் அழகிய வாழ்வை வாக்களிக்கின்றான்:

"அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்".
(அல்குர்ஆன் : 10:64)

ஆக, முஸ்லிம்கள் அஞ்சி நடக்க வேண்டியது அல்லாஹ் ஏவும் அடிப்படையான கட்டளைகளுக்கே:

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல்குர்ஆன் : 3:200)
www.tamililquran.com

May Allah bless our country from kind of evil.

Neenga 2 m pothumda srilankaawin miha mukkiya waruwaaaykku....
Chit...kewlamaana manitharahalaada neengal??

Post a comment