Header Ads



அல்ஹைதா பயங்கரவாதியை கைது செய்வதை ரணில் தடுத்தார் - விஜயதாச

அல்ஹைதா உறுப்பினர் ஒருவரை கைதுசெய்வதை ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது பிரதமரும் ஐந்து அரசியல்வாதிகளும் கொடுத்த அழுத்தம் காரணமாக பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர முகமட் ரிவ்கான் என்ற அல்ஹைதா உறுப்பினர் கைதுசெய்யப்படுவதை தடுத்தார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த முகமட் ரிவ்கான் கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ர்pசாத்பதியுதீன் ராஜிதசேனாரட்ண ஆசாத்சாலி ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் அழுத்தங்களை கொடுத்தனர் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடமும் இதனை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவும் 2018 இல் இலங்கைக்கு வந்த அல்ஹைதா உறுப்பினரை கைதுசெய்யவேண்டாம் என பூஜித்ஜயசுந்தர தெரிவித்தார் என ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார் எனவும் விஜயதாசராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நான் தெரிவித்த விடயங்கள் உண்மை என்பது சந்தேகத்து இடமற்ற விதத்தில் தெளிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள விஜயதாச ராஜபக்ச பொலிஸார் மீது அழுதங்கள் கொடுக்கப்பட்டதால் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி தப்பும் நிலையேற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பயங்கரவாதி கைதுசெய்யவேண்டாம் அவர் குறித்து விசாரணைகளையும் முன்னெடுக்கவேண்டாம் என பூஜித் உத்தரவிட்டிருந்தார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயர்மட்டத்திலிருந்து கொடுக்கப்பட்ட தேவையற்ற அழுத்தங்கள் காரணமாகவே பூஜித் அவ்வாறு செயற்பட்டார் எனவும் விஜயதாச தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.