Header Ads



கொரோனா நோய் அல்ல, நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை


கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதாவது கொரோனா நோய் அல்ல என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. சுமார் 8 மாதங்கள் ஆகியும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிரேசில் அதிபர் கொரோனா சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என்று கூறினார். அமெரிக்க அதிபர் தற்போது மாஸ்க் அணிந்தாலும் கட்டாயப்படுத்தமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது. டாக்டர்கள் மஞ்சள், பனை கற்கண்டு கலந்த பால், காய்கறி சூப், கல் உப்பு கலந்த சுடுநீர் தொண்டையில் படும் வகையில் வாயை கொப்பளிக்கவும் என அறிவுரை வழங்குகிறார்கள்.

இந்நிலையில் சமாஜ்வாதி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பர்க் கொரோனா ஒரு நோய் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் சம்பல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் கூறுகையில் ‘‘கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதாவது கொரோனா ஒரு நோய் அல்ல. ஆனால், நம்முடைய பாவத்திற்காக கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனாவை போக்குவதற்கான சிறந்த வழி, நாம் அனைவரும் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும்’’ என்றார்.

மேலும், ‘‘பக்ரீத் பண்டிகை வர இருப்பதால் மக்கள் ஆடுகள் வாங்க மார்க்கெட்டுக்களை கட்டாயம் திறக்க வேண்டும். கொரானா ஒழிந்து போவதற்காக பிரார்த்தனை செய்ய மசூதிகள் மக்களுக்காக திறக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
    (அல்குர்ஆன் : 30:33)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.