July 14, 2020

ஹரீஸை ஆதரித்து ஹக்கீம், ஆற்றிய முக்கியத்துவமிக்க உரை

சாய்ந்தமருது நகர சபையை சாத்தியமாக்கி கொள்ள வேண்டுமென்பதற்காக நாம் பல முயற்சிகளை மேற்கொண்டோம். கல்முனை மாநகரம் கூறு போடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகக் கவனமாக பல விடயங்களை மாறிமாறிக் கையாள வேண்டியிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்துக்கொண்டும் சில தடவைகள் பேசினோம். முஸ்லிம் காங்கிரஸினால் அதனை பெற்றுக்கொடுக்கின்ற நாள் நிச்சயமாக வரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் ஒருவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை ஆதரித்து கல்முனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

அம்பாறை மாவட்ட அரசியலில் கல்முனை பிரதேசத்திற்கான பிரதிநிதித்துவம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த தேர்தலிலும் அந்த ஆசனத்தை கைப்பற்றியே ஆகவேண்டும். அதற்காகவே இந்த முழுத் தொகுதியிலும் ஒரே ஒரு வேட்பாளராக ஹரீஸை நிறுத்தியுள்ளோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமையான எனது கண்டுபிடிப்பே அவர். எனது காலத்திலே அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அறிமுகப்படுத்திய முதல் தேர்தலிருந்து இன்று வரை இடைநடுவே சிறிய நழுவலை தவிர, அவர் நேர்மையாகவும், முழுமையாகவும் இந்தக் கட்சியோடு இணைந்து பணியாற்றுகின்றார்.

அதுமாத்திரமன்றி, பல சிக்கல்களுக்கு மத்தியில் பிரச்;சினைகளின் போதெல்லாம் அவற்றை தீர்ப்பதற்கு தலைமையுடன் நின்று போராடி அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர்.

இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ{டன் நற்புறவுடன் நடந்துகொள்கின்றது. ஆனால், அம்பாறை மாவட்டத்தில் தனித்து கேட்கவேண்டும் என்ற பிடிவாதத்துடன் கல்முனையில் வேட்பாளர்களாக இருவரை களமிறக்கியுள்ளது; ஈற்றில் இருவருக்குமே முகவரி இல்லாமல் போகப் போகின்றது.

எமது இயக்கமே அந்த வேட்பாளர்கள் இருவரையும் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது. ஒருவருக்கு மாகாண சபை அந்தஸ்த்தாவது இரண்டு முறை கிடைக்கும் வாய்ப்பும்இந்த கட்சியூனூடாகத் தான் கிட்டியது. இந்த மண்ணிலிருந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தாண்டிச் சென்று பாராளுமன்ற ஆசனத்தை அல்ல, மாகாண சபை ஆசனத்தைக் கூட எவராலும் எண்ணிப்பார்க்கவும் முடியாது.

கடந்த மாநகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது பள்ளிவாசல் உறுப்பினர்களுடன் சேர்ந்து பக்கவாத்தியம் வாசித்து சில சதி முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவை அனைத்தையும் இரவோடு இரவாக கஷ்டப்பட்டு முறியடித்தவர்தான் எமது பாராளுமன்ற வேட்பாளரான எச்.எம்.எம்.ஹரீஸ்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினர் எப்படியாவது கல்முனை மாநகர சபையி;ன் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக நிறைய சூழ்ச்சிகளைச் செய்தார்கள். நாங்கள் ஒவ்வொரு உறுப்பினர்களையும் எங்கெல்லாமோ சென்று தேடி வளைத்துப்பிடித்து எங்களுடைய பெரும்பான்மையை நிரூபித்து மருதமுனை சிரேஷ்ட சட்டத்தரணி றகீபை மேயராக்கும் முயற்சியில் கடைசி வரையில் போராடி வெற்றிகண்டோம்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற அதிகார போட்டியினால் உருவெடுத்த பிரச்;சினைகள் ஒரு சவாலாக இருக்கலாம். சாய்ந்தமருதுக்கு நகர சபை அந்தஸ்த்தை வழங்குவதற்கு நாங்கள் நிச்சயமாக அனைத்து முயற்சிகளையும் மிகத் தீவிரமாக கடந்த ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மேற்கொண்டோம்.
அதேநேரம் இந்த கல்முனை மாநகரம் கூறு போடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகக் கவனமாக பல விடயங்களை நாங்கள் மாறிமாறிக் கையாள வேண்டியிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்துக்கொண்டும் சில தடவைகள் பேசினோம்.

எப்படியாவது அதனை சாத்தியமாக்கி கொள்ள வேண்டுமென்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டோம்.

இறுதிக் கட்டத்தில் சில இணக்கப்பாடுகளை எட்டமுடியாமல் போனமையினால் அது சாத்தியமாகாது விட்டாலும் அதனை சாத்தியமாக்கி தருவதாகக் கூறி, அந்த செய்தியை உத்தியோகபூர்வமாக வர்த்தமானியிலும் பிரசுரித்த பிறகு அதனையும் இல்லாமல் செய்த ஆட்சியாளர்களுக்கு தான் இந்தக் கும்பல் வக்காளத்து வாங்கிக்கொண்டு இருக்கின்றது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸினால் அதனை பெற்றுக்கொடுக்கின்ற நாள் ஒன்று நிச்சயமாக வரும்.

இவ்விடயம் தொடர்பில் கல்முனைக்கும் பாதகம் ஏற்பட்டுவிடாமல் அதனை சாதுரியமாக செய்து கொடுக்கின்ற முயற்சியில் நாங்கள் ஒருபோதுமே பின்னிற்கப் போவதில்லை.

இத்தனைப்பிரச்சினைக்களுக்கும் நடுவே நிறைய பேர் குளிர்காயவும் முற்பட்டார்கள். கொழும்பிலிருந்து பிக்குமார்களை கூட்டி வந்து உண்ணாவிரதத்திலிருப்பவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறிக்கொண்டு கலாட்டாவில் ஈடுபட்டார்கள்;.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த விடயங்களை கையாள்வதில் மிக லாவகரமாக நின்று பிடித்து பெரியதொரு கலவரத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்த முயற்சித்த அனைவரையும் தோற்கடிப்பதற்காக இங்கிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் செயற்பட்ட விதத்தை மக்கள்; தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் பிரதிநிதித்துவத்தை இழக்காமல் பாதுகாப்பது என்பது எங்களுடைய கடமையாகும். இதனை உணர்ந்து தான் இவ்வாறு சாரிசாரியாகக் அணி திரண்டு இந்த தேர்தலில் இந்த மாவட்டத்தையும் வெல்ல வேண்டும்; எங்களுடைய ஆசனத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியில் நாம் மிகத் தீவிரமாக் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

இப்பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுஏனைய வேட்பாளர்களும் உரையாற்றினர்.

2 கருத்துரைகள்:

POIYAN, EMAATRUKAARAN, MUSLIMGALAI
NEDUNAALUM EMAATRA MUDIYATHU, ENRU
PURINDUKONDUVITTAN.
THOLVI NICHAYAM ENRU THERINDU, MAYDAIKALIL ANGUMINGUM
ODI ODI NADUNGUKINRATHAI PAARKA
MUDIKIRATHU.
MUSLIM CONGRASUKKU IMMURAI
THOOKKU MAYDAI NICHAYAM.
MARAM SHETHU PALA AANDUKALAAKIVITTANA.!!!

அம்பாரையில் SLMC மரச்சின்னத்தில் கேட்கவில்லை. "அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் ஒருவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை ஆதரித்து கல்முனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்"

Post a comment