Header Ads



முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை வென்றெடுக்க, முடியாமல் போய்விடுமோ என அச்சம்

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது. 

இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். கடந்த முறை கிட்டத்தட்ட இந்தத் தொகையினர் இருந்தனர். ஆனால், வருகின்ற நாடாளுமன்றில் முஸ்லிம்களின் சதவீதத்துக்கு ஏற்ப, உறுப்பினர்கள் இருப்பார்களா என்கிற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.  நாடாளுமன்றத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓர் உறுப்பினர் மட்டும் தெரிவு செய்யப்பட்டாலும், அவர் ‘பெறுமானம்’ மிக்கவராக இருக்க வேண்டும் என்கிற வாதத்தைக் கணிசமானோர் முன்வைப்பதுண்டு. நாடாளுமன்ற அமர்வுகளுக்குச் செல்லாதவர்கள், சென்றாலும் அங்கு உரையாற்றாதவர்கள், உரையாற்றாமல் விட்டாலும் அடுத்த உறுப்பினர்களின் உரைகளைச் செவிமடுக்காமல் உறங்குகின்றவர்கள் 20 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை விடவும், செயலூக்கம் மிக்க ஓர் உறுப்பினர் மட்டும் இருந்தாலே போதும் என்கிற தர்க்க ரீதியான வாதத்தில், நியாயம் இல்லாமலும் இல்லை.  

ஆனாலும், பெரும்பான்மை விருப்புக்கமைய முடிவுகள் எட்டப்படுகின்ற சட்டவாக்க சபையான நாடாளுமன்றில், முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உச்ச அளவில் வைத்திருக்க வேண்டியமையும் அவசியமாகிறது.  

மறுபுறம், இந்தத் தேர்தலில் எவ்வாறானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும், முஸ்லிம் வாக்காளர்கள் அக்கறை காட்டுதல் வேண்டும்.  

அடுத்து அமையவிருக்கும் நாடாளுமன்றம், சவால்கள் நிறைந்ததாக இருக்கப் போகின்றது எனப் பலரும் கூறுகின்றனர். குறிப்பாக, முஸ்லிம்கள் அங்கு பெரும் சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதை, அனுமானிக்க முடியுமாக உள்ளது.  

ஜனாதிபதித் தேர்தல் முடிவின் அடிப்படையில்  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், சஜித் பிரேமதாஸ பருமட்டாக 260,000 வாக்குகளைப் பெற்றார். கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு 135,000 வாக்குகள் கிடைத்தன.  

இதனடிப்படையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னம், எத்தனை வாக்குகளைப் பெறும் சாத்தியம் உள்ளது என்பதைப் பார்ப்போம்.  

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த மேற்படி 260,000 வாக்குகளில் (அண்ணளவானது) இருந்து, தமிழர்களின் 50 ஆயிரம் வாக்குகளையும் (அம்பாறை மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 40 ஆயிரம் வாக்குகளையும் கழித்தால் 170,000 வாக்குகள் மிகுதியாக வரும்.  

அம்பாறைத் தொகுதியில், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ சுமார் 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அம்பாறைத் தொகுதி, முற்று முழுதாக சிங்களவர்களைக் கொண்டது. 

இப்போது, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து, சஜித் அணி போட்டியிடுவதால், அம்பாறைத் தொகுதியில், அண்ணளவாக அரைவாசித் தொகை வாக்குகள் (25 ஆயிரம்) இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குச் சென்று விடும் என வைத்துக் கொள்வோம். அந்தவகையில், இம்முறை தொலைபேசிச் சின்னம் 145,000 வாக்குகளைப் பெறும் என்கிற முடிவுக்கு வரலாம்.  

அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைத்த 130,000 வாக்குகளில், தேசிய காங்கிரஸுக்கு உரித்தானது என்கிற வகையில் 40,000 வாக்குகளைக் கழிப்போம். (ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு ஆதரவளித்த அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது). அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில், பொதுஜன பெரமுனவுக்கு 90 ஆயிரம் வாக்குகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.  

(தமிழர், முஸ்லிம்களிடமிருந்து நேரடியாக ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இம்முறை கிடைக்கும் வாக்குகளை, நாம் இங்கு கருத்திற் கொள்ளவில்லை).  
இந்தக் கணக்கின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தை, தொலைபேசி சின்னம் வென்றெடுப்பதற்கான சாத்தியம் உள்ளது.  

உள்ளூராட்சி கணக்கு  

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 70 ஆயிரம் (பருமட்டாக) வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில், யானைச் சின்னத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்தத் தொகையுடன், அம்பாறை தொகுதியில் கிடைக்கும் சுமார் 15 ஆயிரம் வாக்குகளையும் சேர்த்தால், 85 ஆயிரம் வாக்குகளையே இம்முறை பொதுத் தேர்தலில் தொலைபேசி சின்னம் பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.   

அம்பாறை மாவட்டத்தில் மொத்தம் ஏழு நாடாளுமன்ற ஆசனங்கள் உள்ளன. அவற்றில் 01 போனஸ் ஆசனமாகும். அம்பாறை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகை 05 இலட்சத்து 14 ஆயிரமாகும் (பருமட்டான தொகை). இந்த வாக்காளர்களில், சுமார் 50 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர் என வைத்துக் கொள்வோம். வரும் விடை 464,000 ஆகும். இவர்களில் 80 சதவீதமானோர் வாக்களித்தால் 371,200 வாக்குகள் அளிக்கப்படும். அவ்வாறாயின் ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாக்குகளின் எண்ணிக்கை (371,200 ஐ 06ஆல் பிரித்தால்) 62 ஆயிரம் (பருமட்டான தொகை) என வரும். இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால், தொலைபேசி சின்னத்துக்கு ஓர் ஆசனம் மட்டுமே கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.  

அப்படி நடந்தால், அம்பாறை மாவட்டத்தை பொதுஜன பெரமுன கட்சி வென்றெடுக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

மட்டக்களப்பில் குழப்பம்

அம்பாறை மாவட்டத்தில் கூட்டணியமைத்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் அதேவேளை, மட்டக்களப்பில் கடந்த முறை போன்று, அந்தக் கட்சி தனது மரச் சின்னத்திலேயே இம்முறையும் தனித்தே போட்டியிடுகின்றது.  

ஆயினும், அங்கு முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவும், அதே கட்சியில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரும் மிக மோசமான வகையில், முட்டி மோதிக் கொள்கின்றனர்.  

அலிஸாஹிர் மௌலானாவும், ஹாபிஸ் நஸீரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்களாவர். அதே ஊரில்தான் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத்தும் வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஏறாவூருக்குக் கடந்த வாரம், தேர்தல் பிரசாரத்துக்காக மு.கா தலைவர் சென்றிருந்த நிலையில், அலிஸாஹிர் மௌலானாவும் ஹாபிஸ் நஸீரும் வெவ்வேறாகவே பிரசாரக் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர்.  

முதலில் அலிஸாஹிர் மௌலானா ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா,  சக வேட்பாளர் ஹாபீஸ் நஸீரைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘ஊழல் பேர்வழி’ என்றும் ‘டம்மி வேட்பாளர்’ எனவும் ஆத்திரத்துடன் கூறினார். 

ஆனால், இதற்குக் கண்டனங்கள் எதையும் மு.கா தலைவர் தெரிவிக்கவில்லை. 
அதுமட்டுமன்றி, அங்கு உரை நிகழ்த்திய ஹக்கீம், “அலிஸாஹிர் மௌலானா நாடாளுமன்றத்தில் இருந்தாக வேண்டிவர். அவர் வகிக்கும் பாத்திரம், தங்கப் பாத்திரமாகும். அலிஸாஹிர் மௌலானாவின் இடத்தை, யாரும் அத்தனை எளிதில் எட்டிப் பிடிக்க முடியாது” என்றார். ஹக்கீமுடைய இந்தப் பேச்சு, மௌலானாவின் ஆதரவாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.  

அதையடுத்து, ஹாபிஸ் நஸீர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆனால், ஹாபிஸ் நஸீருக்கு வாக்களிக்குமாறு, அங்கு ஒரு வார்த்தையைக்கூட, ஹக்கீம் கூறியிருக்கவில்லை.  

முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹாபிஸ் நஸீர், சில காலங்களுக்கு முன்னர், அந்தக் கட்சியில் இணைந்து, பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டமை நினைவுகொள்ளத்தக்கது.  

இவ்வாறான வெட்டுக் குத்துகள், முஸ்லிம் கட்சிகளின் சக வேட்பாளர்களுக்கு இடையிலேயே, பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம்களின் விகிதாசாரப்படி எதிர்பார்க்கப்படும் 22 முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வென்றெடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம், பொதுமக்கள் மத்தியில் தோன்றியிருப்பது நியாயமானதாகும்.    முகம்மது தம்பி மரைக்கார்

4 comments:

  1. இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்படி ஒரு காலம் வரும் முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும். உலக மக்களெல்லாம் ஒன்றிணைந்து முஸ்லிம்களை தாக்குவார்கள். ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்குபோட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல். அப்போது அங்கிருந்த ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில் அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார்.

    அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர் களாகவே இருப்பீர்கள்.” ஒருவருக்கொருவர் முரண்பட்டவராக இருப்பீர்கள் உங்களிடம் ஒற்றுமை இருக்காது. உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் “வஹ்ன்” குடிகொண்டு விடும் என்று கூறினார்கள். “வஹ்ன்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள்.
    அறிவிப்பாளர் : ஸவ்பான்(ரழி), அபூதாவூத்: 4297, பாடம் 39, ஹதீஃத் எண். 7,ஆங்கிலம்: பாடம் 38, ஹதீஃத் எண். 4284
    Source: annajath.com

    ReplyDelete
  2. மொஹமட் தம்பி மரிக்கர் கூறியதில் சில அரசியல் அர்த்தங்கள் உள்ளன ஆனால் "முஸ்லிம் குரல்" கீழே உள்ள யதார்த்தத்தை வெளிப்படுத்த விரும்புகிறது.
    முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தாங்களாகவே செயல்படத் தொடங்கியுள்ளனர், மேலும் கோதபயாவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டாபயா, மஹிந்த வின் வெற்றியை வெற்றிபெறச் செய்வதற்கான திறனுக்குள் முடிந்த அனைத்தையும் முஸ்லிம்கள் செய்ய வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    முஸ்லிம் வாக்கு வங்கியின் ஒரு பகுதியினய முசம்மில் ஹஜியார், ஜுஹைர் ஹஜியார், என்.எம்.அமீன் போன்ற முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தலைமையில், SLMC, ஏ.சி.எம்.சி மற்றும் என்.யு.ஏ தலைவர்களின் கைக்கூலிகளால் நடத்தப்பட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் ஊடக நாடகங்களால் அவர்கள் 2010, 2015 இல் முஸ்லீம்கள் ஏமாற்றப்பட்டனர். முஸ்லீம்கள் ஏமாற்றப்படுவதற்கு இனி தயாராக இல்லை. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு 2019 -இல் வாக்களித்த 300,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாராளுமன்றங்களுக்கான எம்.பி.யின் தேசிய பட்டியல் நியமனங்களில் களுத்துறை முஸ்லிம்கள் மற்றும் கண்டி மாவட்ட வாக்காளர்களின் வாக்குகளாளும் க்மற்றும் கோதபய ராஜபக்ச ஆகியோரின் உதவியால் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, மர்ஜன் ஹஜியார் அந்த வாய்ப்பைப் பெற முடியும். அது நடக்கும்படி முஸ்லிம்களான நாம் துவாவைக் கேட்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஏற்கனவே "பொட்டுவா" க்கு வாக்களித்த 300,000 முஸ்லீம்கள், இந்த முறை கிட்டத்தட்ட 650,00 முஸ்லீம்கள் SLPP க்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.
    மும்மாதிரியஹா ஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்,என்று முஸ்லீம் குரல் ("The Muslim Voice") 2014 ஆணி முதல் இருந்து இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் மர்ஜன் ஹஜியார் சொல்லி வருகிறார். களுத்துறை முஸ்லீம் வாக்காளர்கள் மர்ஜன் ஹஜியரை ஆதரிக்க வேண்டும், அவருக்கு ஆதரவாக எஸ்.எல்.பி.பி.க்கு ஒருமனதாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். இதைத்தான் கோதபய ராஜபக்ஷ புதிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், எங்கள் “மாத்ருபூமியா” என்கிற மக்களிடமிருந்தும் கேட்கிறார். இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய இது சரியான தருணம். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ். மறைந்த அஸ்வர் ஹஜியாரின் தலைமையில் செயல்பட்ட (SLPP) எஸ்.எல்.பி.பி முஸ்லிம் பிரிவு அணியை ஓரங்கட்டப்படாமல் ஒன்றாக அவர்களை மரியாதையுடன் நடத்துவது முக்கியம், ஏனென்றால் அவர்கள் 2005, 2010 மற்றும் 2015 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மஹிந்தா மற்றும் கோட்டபயா, பசில் ராஜபக்ஷவுடன் நின்ற SLFP / SLPP முஸ்லீம் ஆதரவாளர்கள். அவர்கள் 2015 ல் 300,000-350,000 முஸ்லீம் வாக்குகளைப் பெற்றறு கொடுக்க காரணம்.
    அப்படியானால், பொட்டுவா தேசிய பட்டியல் எண் 2 -வழக்கறிஞர் அலி சப்ரி மற்றும் எண் 11 - மர்ஜன் ஹஜியாரூம் பாராளுமன்றத்திற்கு செல்லலாம். பொட்டுவா (எஸ்.எல்.பி.பி) குறைந்தது 15 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினகளை பெறும் என்பதால், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – "The Muslim Voice”.

    ReplyDelete
  3. ARASHIAL SHARITHIRATHAI EDUTHUPAARTHAAL
    IPPOTHU ULLA MUSLIM ARASHIALVAATHIKAL,
    POIYARKAL, MUSLIMGALI EMAATRI, THANGALUDAYA POKETTUKALAI NIRAITHUKONDATHAI THAVIRA,MUSLIMGALUKKAAKA THURUVIYA THENGAAI ONRUMILLAI.
    NERMAIYAAKA NADANDA ARASHIALVAATHIKAL,
    ANAIVARUM MARANITHUVITTAARKAL.
    ORU UTHAARANAM, (DOCTOR BADIUDIN MAHMOOD) AVARKALUKKU ALLAH MELAANA
    SUVARKATHAI KODUPPAANAAKA. AAMEEN.

    ReplyDelete
  4. Writer should encourage Muslims how to vote to increase Muslim representation from 3 MPs in 2015 to 4 MPs in 2020 in Ampara district. We should not spilt our votes and to use all 3 preferences.Do not compare local government results because it may change after 2 years. In the president election Pothuvil seat SLPP got about 20,000 votes from half of them are sinhalese (Damana and Uhana area) so the balance is horse party so there is less chance they can get a seat.
    My prediction is 4-Telephone, 2-SLPP and 1-TNA in Ampara district.

    ReplyDelete

Powered by Blogger.