Header Ads



முஸ்லிம்கள் அதிகம்வாழும் மத்திய கொழும்பில் ரணில், சஜித் கடும் போட்டி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் மத்திய கொழும்பு தொகுதியில் தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்ற தொகுதியான மத்திய கொழும்பு தொகுதியில் அமைந்துள்ள சுச்சரித்த மண்டபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

ரணசிங்க பிரேமதாச கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மத்திய கொழும்பு தொகுதியில் அமைந்துள்ள புதுக்கடையில் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று ஆரம்பித்தார். இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பைரூஸ் ஹாஜியார் ஏற்பாடு செய்திருந்தார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கடுவலை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் நாளைய தினம் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள உள்ளார். சஜித் பிரேமதாச இதுவரை 100 கூட்டங்களை நடத்தியுள்ளதுடன் நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட வடபகுதி மாவட்டங்களில் 18 கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளார்.

1 comment:

  1. சஜித் மற்றும் ரணில் ஆகியோர் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியிலோ எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் .எனவே இவர்களிடம் சரியான அபிவிருத்தி ஒப்பந்தங்கள் இல்லாமல் வாக்களிப்பது எவ்வித பிரயோசனமும் இல்லை .

    ReplyDelete

Powered by Blogger.