July 13, 2020

பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கி, ஏனைய மதங்களும் பாதுகாக்கப்படும் - மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

ஒற்றையாட்சிக்குள்  பௌத்த மதத்திற்கு   முன்னுரிமை வழங்கி  ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு  அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சுதந்திரத்துடனும் வாழும் சூழ்நிலை   மீண்டும் உறுதிப்படுத்தப்படும். 

பலவீனப்படுத்தப்பட்ட அரச சேவையை  குறுகிய  காலத்தில் பலப்படுத்தியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

நேற்று இரவு மொறட்டுவை - லுனாவை  பகுதியில் இடம் பெற்ற தேர்தல்  பிரசாரக் கூட்டத்தில்  கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்தில் அரசியல்  தேவைகளுக்காக    பலவீனப்படுத்தப்பட்டிருந்த அரச சேவையை  குறுகிய காலத்தில் பலப்படுத்தினோம்.  அரச துறையினர்   முன்னெடுக்கும் சேவைகள்    பொது மக்கள் மத்தியில்  ஏற்றுக் கொள்ள  கூடியதாகவும், வினைத்திறன்மிக்கதாகவும் காணப்பட வேண்டும்.

கொவிட்-19  வைரஸ்    பரவலை   கட்டுப்படுத்தவும்,   பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கவும் அரச சேவையினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.      நெருக்கடியான  நிலையில் குறைவான வசதிகளுடன்  அரச ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை  வினைத்திறனுடன் முன்னெடுத்தார்கள்.  ஆகவே   பலமான அரசாங்கம்  தோற்றம்பெறுவதற்கு   அரச ஊழியர்களின்  பங்களிப்பு    முக்கியமானது.

அனைத்து இன      மக்களும் சுதந்திரமாகவும், தத்தமது  கலாச்சரங்களை  முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது.   ஒற்றையாட்சி  நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி  ஏனைய  மதங்களின் உரிமைகள்  பாதுகாத்து    அனைத்து  இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

எமது ஆட்சியில்   விகாரை,  கோவில்,  பள்ளிவாசல்  மற்றும்  தேவாலயம் ஆகியவை  மறுசீரமைக்கப்பட்டன.  அபிவிருத்தி  பணிகளின் போது இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.    நாட்டுக்கே அபிவிருத்தி பணிகள் ஒருமித்த விதத்தில் முன்னெடுக்கப்பட்டன.  வடக்கு , தெற்கு என வேறுப்படுத்தி பார்க்கவில்லை.  என்றார்.

2 கருத்துரைகள்:

அன்பார்ந்த மேன்மை தங்கிய மஹிந்த ஐயா அவரகளுக்கு வணக்கம். நீங்கள் மிகவும் நல்லவர். வல்லவர். தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து கடந்த காலங்களில் திறம்பட ஆட்சியினை நடாத்திச் சென்றுள்ளீர்கள். மீண்டும் தாங்கள் நாட்டின் தலைவராக வந்து நாட்டினை அமைதியான அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வளமுள்ள நாடாக மாற்ற வேண்டும் என்றுதான் பொதுவாக அனைத்து இன மக்களின் வேண்டுதலாகவும் இருக்கினறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில பொதுப்பெரமுனவிற்கு எதிராக 6,328,244 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதற்காக இலங்கையர் என்ற வகையில் நாம் மிக அதிகம் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஏனெனில் பொதுப் பெரமுன அதிகமாக வெல்லக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது என்று மக்களுக்குத் தெரிந்திருந்தும்கூட அவரகள் ஜனநாயகத்தைக் காப்பதற்காக இத்துணை வாக்குகளையும் அளித்தார்கள்.

இறைவன் இயல்பாகவே மனிதர்களைப் பலவீனர்களாகவே படைத்துள்ளான். அதில் யாரும் விதிவிலக்கு அல்ல. நீங்கள் எதேச்சையாக விட்ட ஒன்று இரண்டு தவறுகளால் நீங்கள் தொடர்ந்து ஜனாதிபதியாக வரவேண்டிய சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டது. அது மாத்திரமல்லாமல் புதிய புதிய இனவாதிகளும் கணக்கில்லாமல் தோன்ற ஆரம்பித்துவிட்டனர். எமது அழகிய இலங்கைத் திருநாடு இன்று இனவாதிகளின் கைகளில் சிக்கித் தடுமாறுகின்றது. ஆனால் அதிலும் மகிழ்வுக்குரிய விடயம் என்ன வென்றால் சாதாரண பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கினறார்கள். பொதுப் பெரமுனவிலுள்ள ஆரம்பத் தலைவர்கள் இயல்பாகவே மிகவும் நல்லவரகள். அவரகளுல் பலர் நாட்டின் கண்ணியத்தைக் காப்பதற்காக அராஜகத்தை எதிர்த்துப் போராடியவரகள். பொதுப் பெரமுன வந்தேறு குடிகளிடம் அகப்பட்டு நாட்டை சின்னாபின்னமாக்கிவிட்டது என்ற பழிச் சொல் எதிர்காலத்தில் வந்துவிடக்கூடாது. எனவே பொதுப் பெரமுனவின் மாண்பினைக் காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அதனுடைய கண்ணியமான ஆரம்பத் தலைவராகிய தங்களிடமே உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அவரகள் சிங்களவரகளின் தலைவரோ அல்லது சிங்கள பௌத்தர்களின் தலைவரோ அல்லர். அவரகள் இலங்கை நாட்டின் மகாத்தான தலைவர் என்ற எண்ணப்பாங்கு நாட்டின் சகல மக்களிடமும் வரல் வேண்டும்.

ஐயா, பாரம்பரியமிக்க இனத் துவேசம் அற்ற அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்ற வேண்டிய பொறுப்பு தங்கள் கைகளில்த்தான் இருக்கின்றது. அதை நம்பித்தான் மக்கள் இருக்கின்றனர். சகல மக்களையும் எவ்வித பேதங்களும் இல்லாது ஒன்றிணைத்து அவரகளுக்கு அன்பு காட்டி அரவணைத்து நாட்டை வெற்றிப் பாதையில் நகர்த்திச் சென்று உலக மக்களின் பாராட்டினைப் பெறுவதும் உங்கள் கைகளில்த்தான் இருக்கின்றது. நாட்டின் எதிர்கால தலைவர்களுக்கு சிறந்த அறிவினையூட்டி அவரகளும் உஙகளைப் போன்று எவ்வித பேதமுமற்று நாட்டை நகர்த்த வேண்டிய பொறுப்பும் அவரகளுக்கு இருக்கினறது என்பதனையும் அவரகளுக்கு உணர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது. யாராலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதனையும் மக்கள் சக்தி மாபெரியது என்பதனையும் உங்கள் காலத்திலேயே மக்களுக்கு நீங்கள் உணர்த்திச் செல்லுவீர்கள் என்ற நம்பிக்கை இலங்கை மக்களாகிய எங்களுக்கு உண்டு. வணக்கம்.

Hello, Dear Honourable Mahinda Sir. You are so good. Manly. You have taken decisions arbitrarily in the past, and you have effectively ruled the country. It is generally the demand of all ethnic groups that you must return as the leader of the country, and make the country a prosperous by engaging in peaceful development. In the last presidential election, 6,328,244 votes were cast against the SLPP. As Sri Lankans, we should be very happy. Because people knew already about democracy, and it's value. The mass has voted in order to the defence of democracy.

The Almighty, the Lord naturally created humans as weak. None of that is an exception. The one thing you have made a couple of mistakes as a human which not only affect you but also the citizen of Sri Lanka. Because of this effect, new racists have begun to appear innumerable. Today our beautiful Sri Lankan state is falling into the hands of racists. But what is even happier is that ordinary people became more vigilant. Actually, the organized leaders of the SLPP are naturally very good people. Many of them fought against anarchy to preserve the dignity of the country. But the outlook of the SLPP might be reproached severely. They might also decimate the country as well as the SLPP in the future. Therefore, it is the responsibility of yours and the organized leaders to protect the dignity of the SLPP. Mahinda Rajapaksa (Sir) is not the leader of the Sinhala people or the Sinhala Buddhists. But he is the greatest leader of the citizen of Sri Lanka.

The responsibility of transforming Sri Lanka into a developed country without traditional ethnic origin is in your hand. There are people who sincerely believe in it. It is in your hands to unite all the people without any discrimination, show them love and warmth, move the country on the path to victory and win the praise of the people of the world. The time has come to make the future leaders of the country better informed and aware that they have the responsibility to move the country like you. We, the people of Sri Lanka, are much confident that you will make it clear to the people in your time that no one can deceive the people, and that the power of the people is immense.

Post a comment