Header Ads



கழுதைகளை வீட்டிற்கு விரட்டி, குதிரைகளை பாராளுமன்றம் அனுப்ப அறிந்திருக்க வேண்டும்


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றிரவு காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

சில அரசியல் சம்பவங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஸ இதன்போது கருத்து வௌியிட்டார்.

நாம் கட்சியொன்றை அமைத்தால் எம்மை வீதியில் இறக்கப்போவதாகக் கூறியவரும் இம்முறை எமது கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அது தொடர்பில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். அன்பாக வரவேற்கின்றோம். தீயினால் சுடுபட்டவர் மின்மினிப் பூச்சிக்கும் அச்சம் கொள்வார் அல்லவா? ஆகவே, எனக்கும் அச்சமாக உள்ளது. எமது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய முறையில் செயற்பட வேண்டும். எமது தவிசாளர்கள், மேயர்கள் செயற்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த, மேர்வின் சில்வாவை மன்னித்ததைப் போன்று மன்னிப்பு கிடைக்காது. எம்மிடம் மிகப்பெரிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை பரீட்சித்து பார்க்க முடியாது. மீண்டும் ஒருமுறை தோற்க முடியாது. தோல்வியுற்று சிறைச்சாலைகள் தோறும் செல்ல முடியாது. எமது பெண் வேட்பாளர் ஒருவர் பட்டியலை அனுப்பினார். இதிலுள்ள அனைவரும் கழுதைகளும் குதிரைகளும் தானே என என்னிடம் கேட்கிறார். நான் அவருக்கு எழுதி அனுப்பினேன். வேட்பாளர்கள் மத்தியில் குதிரைகளும் கழுதைகளும் இல்லாவிட்டாலும் வேட்புமனுக் குழுவில் கழுதையொன்று இருந்ததாலேயே உங்களைத் தெரிவு செய்துள்ளது என கூறினேன். இல்லாவிட்டால், அவரைப் போன்ற ஒருவரை தெரிவு செய்திருப்பார்களா?

என பசில் ராஜபக்ஸ கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஓஷதி ஹேவமத்தும பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

நாம் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவோரை புத்திசாலித்தனமாக அனுப்பாவிட்டால், கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்ற விடயங்களையே எதிர்கொள்ள நேரிடும். ஆனால், இம்முறை பொதுஜன பெரமுன சார்பில் கழுதைகளும் குதிரைகளும் களமிறக்கப்பட்டுள்ளன. நாம் கழுதைகளை வீட்டிற்கு விரட்டி, குதிரைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு அறிந்திருக்க வேண்டும்

No comments

Powered by Blogger.