Header Ads



சுதந்திரக் கட்சியின் அடுத்த, தலைவர் யார்..?

பொதுத் தேர்தலின் பின்னர் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக போவதாக அந்த கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களிடம் கட்சியின் தலைமைத்துவ வழங்க உள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இளம் தலைவர்கள் குருணாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலேயே இருக்கின்றனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த இளம் தலைவர் , குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த தனது போட்டியாளரை விட 12 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குருணாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சருமான காலஞ்சென்ற பிரேடி பிரேமலால் திஸாநாயக்கவின் புதல்வராவார்.

No comments

Powered by Blogger.