July 22, 2020

சிறந்த பாடத்தை கற்பிக்க விரும்புகின்றோம் - சம்பிக்க

(செ.தேன்மொழி)

ராஜபக்ஷாக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பதற்கான பிரதான திறப்பு தங்களிடமே இருப்பதாக தெரிவித்துள்ள கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டு மக்களுக்காக இருதடவைகள் ராஜபக்ஷாக்களை தோல்வியடைச் செய்தது போன்று , மூன்றாவது தடவையும் அவர்களை தோல்வியடையச் செய்ய எமக்கு முடியும்.  எமக்கு பாதுகாப்பதற்கோ, மகுடம் சூட்டுவதற்கோ பரம்பரை இல்லை. நாங்கள் மகுடம் சூட்ட எண்ணுவது நாட்டிலுள்ள கல்விக்கற்ற சமூகத்திற்கே.  என கூறியுள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ராஜபக்ஷாக்களை வீழ்த்துவது உங்களது நோக்கம் என்றால் அதற்கான பிரதான திறப்பு எம்மிடம்தான் இருக்கின்றது. அது தொடர்பில் அனுபவம் பெற்றவர்களும் நாங்களே. 

கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் ராஜபக்ஷாக்களின் ஆட்சியை வீழ்த்துவதாக தெரிவித்து களமிறங்கியது போன்று , அதனை நிறைவேற்றியும் காண்பித்தோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக செயற்பட்டனர்.

எம்மை சுற்றியிருந்த அரசியல்வாதிகள் மாத்திரமின்றி அதிகாரிகள் கூட டீல் செய்துக் கொண்டு திருடர்களை பாதுகாத்தனர். இதன்போது மக்கள் திருடர்களை விரட்ட வந்த அரசாங்கத்தை திருடர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்து வந்தனர். 

52 நாள் அரசியல் நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக அவருடன் நாங்களே இருந்தோம்.  இன்று அவருடன் பச்சை நிற ஆடைகளை அணிந்துக் கொண்டு திரியும் அனைவரும் அன்று மைத்திரிபால சிறிசேனவுக்கே தங்களது ஆதரவினை பெற்றுக் கொடுத்திருந்தனர்.

ரணில் விக்கரமசிங்கவின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட நம்பிக்கைகாக அல்ல , நாட்டின் ஜனநாயகத்திற்கு , அரசியலமைப்புக்கும் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே நாங்கள் அந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். 

அதேபோன்று  ராஜபக்ஷாக்களை தோல்வியடையச் செய்து எம்முன்னால் அவர்களை மண்டியிட செய்தோம். புதிய அரசாங்கத்தையும் உருவாக்கினோம். அதனால் ஒரு தடவை அல்ல இரு தடவைகள் நாங்கள் ராஜபக்ஷாக்களை தோல்வியடையச் செய்துள்ளோம்.

ராஜபக்ஷாக்களோ , ஐக்கிய தேசியக் கட்சியினரோ நாங்கள் செயற்திறன் அற்றவர்கள் என்று எம்மை விமர்சித்ததில்லை. எவன்காட் மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ எமக்கு எதிராக நான்கு ஆணைக்குழுக்களை அமைத்துள்ளார். 

எம்மீது விசாரணைகளை மேற்கொண்டு சிறையில் அடைப்பதற்காக , இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இதனூடாக மஹிந்தவுக்கு நாங்கள் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றோம். நாம் எப்போதுமே பின்வாங்கியதில்லை.  

நீங்கள் உங்களது வரலாற்றை நினைவில் கொள்ளுங்கள் முல்கிரிய சம்பவம் தொடக்கம் றகர் விளையாட்டு வீரர் தாஜூதீனின் கொலை வரை உங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் தொடர்பில்.

யுத்தத்தின் போதும் நீங்கள் எவ்வாறு அஞ்சியிருந்தீர்கள் என்பது எமக்கு தெரியும். ஒரு தடவையல்ல மூன்றாவது தடவையாகவும் நாட்டு மக்களின் நன்மைக்காக ராஜபக்ஷாக்களை தோல்வியடையச் செய்ய எமக்கு முடியும். 

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது, ரணில் விக்கிரமசிங்கவை போன்று தலையாட்டிக் கொண்டிருக்கவோ, டீல் செய்துக் கொள்ளவோ,  தமது சகாக்களுக்கா நாட்டின் வளத்தை உறிஞ்செடுக்க சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கவோ,  சர்வதேச மற்றும் தேசிய நயவஞ்சகர்களுக்கு நாட்டை காட்டிக் கொடுப்பதற்கோ அல்ல இந்த நாட்டை எமது எதிர்கால சந்தியினருக்கு ஒழுங்கான முறையில் பாதுகாத்து ஒப்படைக்கவே.

எமக்கு பாதுகாப்பதற்கோ , மகுடம் சூட்டுவதற்கோ பரம்பரை இல்லை. நாங்கள் மகுடம் சூட்ட எண்ணுவது நாட்டிலுள்ள கல்விக்கற்ற சமூகத்திற்கே.

 இதற்கு வடக்கு ,தெற்கு ,கிழக்கு என்ற பேதம் எமக்கில்லை.அதனால் உங்களது சக்தியை எமக்கு பெற்றுக் கொடுங்கள். அதனைக் கொண்டு ராஜபக்ஷாக்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்க விரும்புகின்றோம். அவர்கள் மீது நாங்கள் தனிபட்ட குரோதத்தை கொண்டில்லை. 

அவர்கள் நாட்டுக்கு இந்த குறுகிய காலத்திற்குள் செய்துள்ள பாதிப்புகள் தொடர்பில் உங்களுக்கே தெரியும். அதேபோன்று கடந்தகாலங்களில் இருந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களும், அத்தனோல் கடத்தல் காரர்களும் இந்த கூட்டத்தினருடனே இணைந்துக் கொண்டுள்ளனர். இவர்களை விரட்டவே நாம் பலத்தை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

1 கருத்துரைகள்:

MUSLIM THAAIMAARKAL, ORU PILLAIKKU ATHIKAMAAKA, PERUVATHAI THADAISHEIAVENDUM. ORU PILLAI
PETRAVUDAN, MEENDUM PILLAIKAL PERAATHIRUKKA, UDANEY OPERATION PANNIVIDAVENDUM. ENRU KOORUKINRA IVAN
ILANGAIYIL MUSLIMGALAI OLITHUKATTA
THITTAM THEETTIKONDU IRUPPAVAN,

MUSLIMGALEY, SAJITHUDAYA TELEFONUKKU
VAAKKALIPPATHAN MOOLAM, INDASHATTAM AMULNADATHAPATTAAL, ONRUM SHEIYA MUDIYAATHU. AAKAVEY ISLAATHUDAYA
ETHIRKAALATHAI, THEERMAANIPPAVAR
NEENGAL,
SHINDIUNGAL, ISLAATHAI OLITHUKATTUM
PAAVATHUKKU ULLAAKAATHEERKAL.

Post a comment