Header Ads



மதுபானத்தையோ, சிகரட்டுகளையோ வழங்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்: புத்திக்க

(செ.தேன்மொழி)

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது யாராவது ஒரு வேட்பாளர் தனக்கு ஆதரவாக செயற்படும் நபர்களுக்கு மதுபானத்தையோ, சிகரட்டுகளையோ வழங்கியதாக தெரியவந்தால், அந்த வேட்பாளர்கள் கட்சி , தராதரம் வேறுபாடுகள் எதனையும் பாராது அவர்களை புறக்கணிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் புத்திக்க பத்திரன அனைத்து பெண்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் பெண் தேர்தல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த, அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய மகளிர் சக்தியை தேர்தல் காலத்தை மாத்திரம் நோக்காக கொண்டு நாங்கள் அமைக்கவில்லை. எமது ஆட்சியின் போது தொடர்ந்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதனை எதிர்பார்க்கின்றார். கடந்த காலத்தில் பெண் உற்பத்தியாளர்கள் ஒரு இலட்சம் பேரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதனை செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பெண்கள் தொழில் நிலையங்களுக்குச் செல்லாது தங்களது வீடுகளில் இருந்தே சுயதொழில்களை செய்து முன்னேற்றமடைய முடியும். இது போன்ற திட்டங்கள் பல வெறிநாடுகளிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன மடைந்து வரும் சமூகத்தில் அனைத்து பெண்களும் அந்த தொழிநுட்பங்களுடன் இணைந்து செயற்படக் கூடிய அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் தலைமைத்துவத்தில் இயங்கிவரும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் , அவர்களது சுய முயற்சிகளுக்கு வசதிவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் பல திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றோம்.பெண்கள் முற்சித்தால் எந்தனையும் சாதித்துக் காட்ட முடியும். அதனால் நாட்டை முன்னேற்றுவதற்காக பயிரிடப்படும் விதைகளை புல்லுகளாக்காமல் சிறந்த பயிரினை பெறுவதற்கு பெண்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது தலைமைப் பொறுப்பையும் புறந்தள்ளி வைத்து விட்டு பெண்களின் மகற்பேற்று தொடர்பில் கருத்து தெரிவித்த , அனைத்து பெண்களையும் அவமதித்துள்ளார். இன்று பிள்ளைபேற்றானது மிகவும் குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் இரசாயண பதார்த்தங்கள் கலந்துள்ள உணவுப் பொருட்களாகும். அவற்றை நாம் உண்டு வருவதினால் பிள்ளைபேற்றுக்கு இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதேவேளை நாட்டில் எத்தனை குடும்பங்கள் பிள்ளைகள் இன்றி இருக்கின்றன. அவர்களை நிந்தித்து பேசுவது நியயமான செயற்பாடா? என கேள்வியெழுப்பினார்.

No comments

Powered by Blogger.